• Jul 14 2025

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை; அமைச்சர் குறிப்பிடுவது முற்றிலும் பொய்! - உதய கம்மன்பில சீற்றம்

Chithra / Jul 14th 2025, 8:42 am
image


அசாத் மௌலானாவை அரச தரப்பு சாட்சியமாக மாற்றிக் கொண்டு குண்டுத்தாக்குதலை இராணுவத்தின் மீது சுமத்தவே அரச தரப்பு எதிர்பார்க்கிறது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இராணுவத்தினரே குண்டுத்தாக்குதலை நடத்தினர் என்று பிள்ளையான் ஊடாக வாய்மூல சாட்சியத்தை பெறவே இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது.

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை. அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.

தமிழ் பிரிவினைவாதிகளின் நிதியை இந்த அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. 

தமிழ் பிரிவினைவாதிகளை மகிழ்விப்பதற்கு விடுதலை புலிகளில் இருந்து விலகி இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையானை பலிகொடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. 

பிள்ளையானை நான் சிறையில் சென்று சந்தித்தேன்.  நன்றிக்கடன் நிமித்தமே பிள்ளையானுக்காக முன்னிலையாகியுள்ளேன் எனவும் குறிப்பிட்டார்.

 

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை; அமைச்சர் குறிப்பிடுவது முற்றிலும் பொய் - உதய கம்மன்பில சீற்றம் அசாத் மௌலானாவை அரச தரப்பு சாட்சியமாக மாற்றிக் கொண்டு குண்டுத்தாக்குதலை இராணுவத்தின் மீது சுமத்தவே அரச தரப்பு எதிர்பார்க்கிறது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ,இராணுவத்தினரே குண்டுத்தாக்குதலை நடத்தினர் என்று பிள்ளையான் ஊடாக வாய்மூல சாட்சியத்தை பெறவே இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது.குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை. அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.தமிழ் பிரிவினைவாதிகளின் நிதியை இந்த அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. தமிழ் பிரிவினைவாதிகளை மகிழ்விப்பதற்கு விடுதலை புலிகளில் இருந்து விலகி இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையானை பலிகொடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. பிள்ளையானை நான் சிறையில் சென்று சந்தித்தேன்.  நன்றிக்கடன் நிமித்தமே பிள்ளையானுக்காக முன்னிலையாகியுள்ளேன் எனவும் குறிப்பிட்டார். 

Advertisement

Advertisement

Advertisement