மட்டக்களப்பு மாவட்டம் முனைத்தீவு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலை வாய்ப்புக்காக பெலாரஸ் நாட்டிற்கு சென்ற நிலையில், அவர் அங்கு மரணமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பின்னர் அவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம்அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவரின் சகோதரன் விநாயகமூர்த்தி சசிகரன் கருத்து தெரிவிக்கையில்,
எனது தம்பி விநாயகமூர்த்தி பகிரதன். கடந்த 2025.01.07 ஆம் திகதி பெலாரஸ் எனும் நாட்டுக்கு தொழில்வாய்ப்புகாகச் சென்றார் திருகோணமலையைச் சேர்ந்த ஓர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஊடாக சட்டரீதியாக தான் அவர் பயணமானார்.
எனது அம்மா மரணித்து ஒரு வருடமான காலத்தின் பின்னர் மிகுந்த மன வேதனைக்கு உட்பட்டு மிகவும் சிரமத்திற்கு மத்தியில் தான் எனது தம்பி பெலாரஸ் நாட்டிற்கு சென்றிருந்தார்.
பெலாரஸ் நாட்டிற்குச் சென்ற அவர் அங்கு என்ன சுமைகள் இருந்தன என்பது தொடர்பாக எங்களுக்கு எதுவித தகவல்களையும் கூறவில்லை. எப்போதும் போல என்னுடன் சிரித்து பேசிக்கொண்டே இருந்தார்.
அங்கு சிரமப்படுவதாக கூறவில்லை. இந்நிலையில் கடந்த 2025.04.06 ஆம் திகதி அவர் அங்கு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்திருந்தது.
இச்செய்தி கேள்விப்பட்டவுடன் திகைத்துப் போனோம். அந்த அதிர்ச்சியில் இருந்து எம்மால் இன்றும் மீள முடியாமல் இருக்கின்றது.
நான் எனது தம்பி வெளிநாடு சென்ற ஆவணங்கள் அனைத்தையும் பிரதி செய்து கொண்டு பிரதேச செயலகத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தரிடம் வழங்கியிருந்தேன்.
எனது சகோதரன் மரணம் அடைந்திருந்தால் அவருடைய பிரேதத்தை எனக்கு கொண்டு வந்து தருமாறு உரிய நாட்டிடம் தெரிவிக்குமாறு அந்த உத்தியோகத்தரிடம் தெரிவித்திருந்தேன்.
குறித்த ஆவணங்கள் அனைத்தையும் அவர்கள் வெளிநாட்டு தூதரகத்திற்கு அனுப்பி வைத்திருந்தார்கள். எனது தம்பிக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காக நான் பல அரசியல்வாதிகளிடமும் தெரிவித்து இருந்தேன்.
இது தொடர்பாக ஒரு சிலர் எனது வீட்டிற்கு வந்து நிலைமையை விசாரித்து தகவல்கள் பெற்று சென்றார்கள். ஆனால் இன்று வரையில் எனது தம்பி தொடர்பாக எதுவித தகவலும் கிடைக்கவில்லை.
தம்பியை பெலாரஸ் நாட்டிற்கு அனுப்பிய முகவருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அவருடைய உடல் தகனம் செய்து விட்டதாக எனக்கு குறுஞ்செய்தி ஒன்றை மாத்திரம் அனுப்பி உள்ளார். மீண்டும் அவருடன் தொடர்பை ஏற்படுத்த முயன்ற போது அவர் எமது அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை.
ஊடகங்கள் வாயிலாக எமது கருத்துக்களை அறிவிக்கின்றோம். பெலாரஸ் நாட்டுடன் தொடர்புடைய ஏனைய நாடுகளின் தூதரகங்களும், இதனை கருத்தில் கொண்டு எனது சகோதரனுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து உரிய விசாரணைகளை மேற்கொண்டு எனது சகோதரன் உயிரோடு இருக்கிறாரா?
உண்மையிலேயே மரணித்து விட்டாரா? அவர் மரணித்தால் அவருடைய பிரேதம் எங்கிருக்கிறது என்பதை யாராவது எமக்கு தெரிவித்து உதவி செய்யுமாறு நாம் வினையமாக வேண்டுகோள் விடுக்கின்றேன் என தெரிவித்தார்.
மரணித்த தாயின் ஆசையை நிறைவேற்ற வெளிநாடு சென்ற சகோதரன் வீட்டாருக்கு வந்த திடுக்கிடும் செய்தி மட்டக்களப்பு மாவட்டம் முனைத்தீவு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலை வாய்ப்புக்காக பெலாரஸ் நாட்டிற்கு சென்ற நிலையில், அவர் அங்கு மரணமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பின்னர் அவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.நேற்றையதினம்அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவரின் சகோதரன் விநாயகமூர்த்தி சசிகரன் கருத்து தெரிவிக்கையில், எனது தம்பி விநாயகமூர்த்தி பகிரதன். கடந்த 2025.01.07 ஆம் திகதி பெலாரஸ் எனும் நாட்டுக்கு தொழில்வாய்ப்புகாகச் சென்றார் திருகோணமலையைச் சேர்ந்த ஓர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஊடாக சட்டரீதியாக தான் அவர் பயணமானார். எனது அம்மா மரணித்து ஒரு வருடமான காலத்தின் பின்னர் மிகுந்த மன வேதனைக்கு உட்பட்டு மிகவும் சிரமத்திற்கு மத்தியில் தான் எனது தம்பி பெலாரஸ் நாட்டிற்கு சென்றிருந்தார்.பெலாரஸ் நாட்டிற்குச் சென்ற அவர் அங்கு என்ன சுமைகள் இருந்தன என்பது தொடர்பாக எங்களுக்கு எதுவித தகவல்களையும் கூறவில்லை. எப்போதும் போல என்னுடன் சிரித்து பேசிக்கொண்டே இருந்தார். அங்கு சிரமப்படுவதாக கூறவில்லை. இந்நிலையில் கடந்த 2025.04.06 ஆம் திகதி அவர் அங்கு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்திருந்தது.இச்செய்தி கேள்விப்பட்டவுடன் திகைத்துப் போனோம். அந்த அதிர்ச்சியில் இருந்து எம்மால் இன்றும் மீள முடியாமல் இருக்கின்றது. நான் எனது தம்பி வெளிநாடு சென்ற ஆவணங்கள் அனைத்தையும் பிரதி செய்து கொண்டு பிரதேச செயலகத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தரிடம் வழங்கியிருந்தேன். எனது சகோதரன் மரணம் அடைந்திருந்தால் அவருடைய பிரேதத்தை எனக்கு கொண்டு வந்து தருமாறு உரிய நாட்டிடம் தெரிவிக்குமாறு அந்த உத்தியோகத்தரிடம் தெரிவித்திருந்தேன்.குறித்த ஆவணங்கள் அனைத்தையும் அவர்கள் வெளிநாட்டு தூதரகத்திற்கு அனுப்பி வைத்திருந்தார்கள். எனது தம்பிக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காக நான் பல அரசியல்வாதிகளிடமும் தெரிவித்து இருந்தேன். இது தொடர்பாக ஒரு சிலர் எனது வீட்டிற்கு வந்து நிலைமையை விசாரித்து தகவல்கள் பெற்று சென்றார்கள். ஆனால் இன்று வரையில் எனது தம்பி தொடர்பாக எதுவித தகவலும் கிடைக்கவில்லை.தம்பியை பெலாரஸ் நாட்டிற்கு அனுப்பிய முகவருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அவருடைய உடல் தகனம் செய்து விட்டதாக எனக்கு குறுஞ்செய்தி ஒன்றை மாத்திரம் அனுப்பி உள்ளார். மீண்டும் அவருடன் தொடர்பை ஏற்படுத்த முயன்ற போது அவர் எமது அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை.ஊடகங்கள் வாயிலாக எமது கருத்துக்களை அறிவிக்கின்றோம். பெலாரஸ் நாட்டுடன் தொடர்புடைய ஏனைய நாடுகளின் தூதரகங்களும், இதனை கருத்தில் கொண்டு எனது சகோதரனுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து உரிய விசாரணைகளை மேற்கொண்டு எனது சகோதரன் உயிரோடு இருக்கிறாரா உண்மையிலேயே மரணித்து விட்டாரா அவர் மரணித்தால் அவருடைய பிரேதம் எங்கிருக்கிறது என்பதை யாராவது எமக்கு தெரிவித்து உதவி செய்யுமாறு நாம் வினையமாக வேண்டுகோள் விடுக்கின்றேன் என தெரிவித்தார்.