• Jul 11 2025

முச்சக்கர வண்டி சாரதியின் மோசமான செயல்; கொழும்பில் பெண் சட்டத்தரணி எடுத்த நடவடிக்கை

Chithra / Jul 11th 2025, 12:20 pm
image

 

கொழும்பில் பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படும் தனியார் வாடகை வாகன சேவையின் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த வாரம், பெண் சட்டத்தரணி ஒருவர், குறித்த முச்சக்கர வண்டியை வாடகைக்காகப் பதிவு செய்து அழைத்தபோது, 

அதன் சாரதி செயலியில் குறிப்பிடப்பட்ட தொலைபேசியில் அழைக்காமல், வேறு தொலைபேசி இலக்கத்தின் ஊடாக குறித்த பெண் பயணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

இதன் காரணமாக குறித்த பெண் சட்டத்தரணி, தாம் பதிவு செய்த முச்சக்கர வண்டியைப் புறக்கணித்து வேறு ஒரு முச்சக்கர வண்டியில் பயணத்தைத் தொடர்ந்துள்ளார். 

இதன்போதே குறித்த முச்சக்கர வண்டி சாரதி, குறித்த பெண் சட்டத்தரணியைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாக முறையிடப்பட்டுள்ளது. 

இதனையடுத்தே முச்சக்கர வண்டியின் சாரதியை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். 


முச்சக்கர வண்டி சாரதியின் மோசமான செயல்; கொழும்பில் பெண் சட்டத்தரணி எடுத்த நடவடிக்கை  கொழும்பில் பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படும் தனியார் வாடகை வாகன சேவையின் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம், பெண் சட்டத்தரணி ஒருவர், குறித்த முச்சக்கர வண்டியை வாடகைக்காகப் பதிவு செய்து அழைத்தபோது, அதன் சாரதி செயலியில் குறிப்பிடப்பட்ட தொலைபேசியில் அழைக்காமல், வேறு தொலைபேசி இலக்கத்தின் ஊடாக குறித்த பெண் பயணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன் காரணமாக குறித்த பெண் சட்டத்தரணி, தாம் பதிவு செய்த முச்சக்கர வண்டியைப் புறக்கணித்து வேறு ஒரு முச்சக்கர வண்டியில் பயணத்தைத் தொடர்ந்துள்ளார். இதன்போதே குறித்த முச்சக்கர வண்டி சாரதி, குறித்த பெண் சட்டத்தரணியைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாக முறையிடப்பட்டுள்ளது. இதனையடுத்தே முச்சக்கர வண்டியின் சாரதியை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement