• May 20 2025

மட்டக்களப்பில் வீதி அதிகார சபையில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர்கள் போராட்டம்

Chithra / May 20th 2025, 1:52 pm
image


மட்டக்களப்பில் வீதி அதிகாரச சபையில் தற்காலிகமாக கடமையாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்க கோரி ஜக்கிய பொது சேவையாளர் சங்கம்  இன்று பொலிஸ் நிலைய வீதி சுற்றுவடத்தில் இருந்து காந்தி பூங்கா வரையும் ஆர்ப்பாட்ட ஊர்வத்தில் ஈடுபட்டனர்.

வீதி அதிகார சபையில் தற்காலிகமாக இணைக்கப்பட்ட 141 ஊழியர்கள்  கடந்த 9 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வந்திருந்த போதும் அவர்களை இதுவரை நிரந்தரமாக்கப்படவில்லை.

எனவே அவர்களை நிரந்தராக்குமாறு கோரி ஜக்கிய பொது சேவையாளர் சங்கத்தின் மட்டக்களப்பு தலைவர் சுரேஸ் தலைமையில் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனையத்து நகரிலுள்ள பொலிஸ் நிலைய வீதிச் சுற்றுவட்டத்துக்கு அருகில் ஒன்று கூடிய வீதி அதிகார சபையில் தற்காலிகமாக கடமையாற்றிவரும் ஊழியர்கள், 

அனைத்து தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்கு, 14 நாள் மருத்துவ லீவு வழங்கு, ஏனைய ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகளை வழங்கு, போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு அங்கிருந்து ஆர்பாட்ட ஊர்வலமாக காந்தி பூங்காவை சென்றடைந்து அங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்



மட்டக்களப்பில் வீதி அதிகார சபையில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர்கள் போராட்டம் மட்டக்களப்பில் வீதி அதிகாரச சபையில் தற்காலிகமாக கடமையாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்க கோரி ஜக்கிய பொது சேவையாளர் சங்கம்  இன்று பொலிஸ் நிலைய வீதி சுற்றுவடத்தில் இருந்து காந்தி பூங்கா வரையும் ஆர்ப்பாட்ட ஊர்வத்தில் ஈடுபட்டனர்.வீதி அதிகார சபையில் தற்காலிகமாக இணைக்கப்பட்ட 141 ஊழியர்கள்  கடந்த 9 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வந்திருந்த போதும் அவர்களை இதுவரை நிரந்தரமாக்கப்படவில்லை.எனவே அவர்களை நிரந்தராக்குமாறு கோரி ஜக்கிய பொது சேவையாளர் சங்கத்தின் மட்டக்களப்பு தலைவர் சுரேஸ் தலைமையில் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.இதனையத்து நகரிலுள்ள பொலிஸ் நிலைய வீதிச் சுற்றுவட்டத்துக்கு அருகில் ஒன்று கூடிய வீதி அதிகார சபையில் தற்காலிகமாக கடமையாற்றிவரும் ஊழியர்கள், அனைத்து தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்கு, 14 நாள் மருத்துவ லீவு வழங்கு, ஏனைய ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகளை வழங்கு, போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு அங்கிருந்து ஆர்பாட்ட ஊர்வலமாக காந்தி பூங்காவை சென்றடைந்து அங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Advertisement

Advertisement

Advertisement