• Jul 15 2025

ரணசிங்க பிரேமதாசவின் மெய் பாதுகாவலரான சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.எச்.முபாறக் ஓய்வு!

shanuja / Jul 15th 2025, 9:56 am
image

இலங்கை பொலிஸ் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையும் நம்பிக்கையும் கொண்ட சேவையை வழங்கிய எஸ்.எச். முபாரக்  இம்மாதத்துடன் (ஜுலை) தனது அரச சேவையை நிறைவு செய்து ஓய்வு பெற்றுள்ளார்.

 

1989 செப்டம்பர் 12ஆம் திகதி பொலிஸ் துறையில் இணைந்த இவர், தனது பணிக்காலத்தில் இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிற்கு   மெய் பாதுகாவலராக   அமர்த்தப்பட்டார்.


அதிலிருந்து சிறிது காலம்  சென்ற பின்பு களுத்துறை கடுகுருந்த விசேட அதிரடிப்படை முகாமில் பயிற்சியை முடித்துவிட்டு   அதன் பின்னர்   இலங்கை பொலிஸ் கல்லூரியில் தனது  பயிற்சியை முடித்தார். 


அதன்பின்னர்  ஜனாதிபதி உயிரிழந்த  மே மாதம்  முதலாம்  திகதி  வரைக்கும்   மெய்ப்பாதுகாவலராக சேவையாற்றி விட்டு பிராந்தியங்களில் பொது பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டார்.


கடுகுருந்த விசேட அதிரடிப்படை முகாம், களுத்துறை  பொலிஸ் கல்லூரி பயிற்சி வகுப்புகளை முடித்தார். இவர் சேவையின் இறுதியில் கொழும்பு தெற்கு பகுதியில் கடமை செய்துவிட்டு தொடர்ச்சியாக அம்பாறை மாவட்டம்   மகாஓயா , சென்றல் கேம்ப்  , கல்முனை தலைமையக   பொலிஸ் நிலையத்தில் ஏறத்தாழ  16 ஆண்டுகள் சேவையாற்றியதோடு  பெரும் குற்றப்பிரிவு  , நிர்வாகப்பிரிவு  என கடமையாற்றி   அண்மையில் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் சமுக நிர்வாகப்பிரிவு மற்றும் Record Room போன்ற  கடமைகளை வழக்கு தொடர்பான பொறுப்புக்களில் செயற்பட்டு   தனது சேவையை நிறைவு செய்துள்ளார்.

ரணசிங்க பிரேமதாசவின் மெய் பாதுகாவலரான சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.எச்.முபாறக் ஓய்வு இலங்கை பொலிஸ் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையும் நம்பிக்கையும் கொண்ட சேவையை வழங்கிய எஸ்.எச். முபாரக்  இம்மாதத்துடன் (ஜுலை) தனது அரச சேவையை நிறைவு செய்து ஓய்வு பெற்றுள்ளார். 1989 செப்டம்பர் 12ஆம் திகதி பொலிஸ் துறையில் இணைந்த இவர், தனது பணிக்காலத்தில் இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிற்கு   மெய் பாதுகாவலராக   அமர்த்தப்பட்டார்.அதிலிருந்து சிறிது காலம்  சென்ற பின்பு களுத்துறை கடுகுருந்த விசேட அதிரடிப்படை முகாமில் பயிற்சியை முடித்துவிட்டு   அதன் பின்னர்   இலங்கை பொலிஸ் கல்லூரியில் தனது  பயிற்சியை முடித்தார். அதன்பின்னர்  ஜனாதிபதி உயிரிழந்த  மே மாதம்  முதலாம்  திகதி  வரைக்கும்   மெய்ப்பாதுகாவலராக சேவையாற்றி விட்டு பிராந்தியங்களில் பொது பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டார்.கடுகுருந்த விசேட அதிரடிப்படை முகாம், களுத்துறை  பொலிஸ் கல்லூரி பயிற்சி வகுப்புகளை முடித்தார். இவர் சேவையின் இறுதியில் கொழும்பு தெற்கு பகுதியில் கடமை செய்துவிட்டு தொடர்ச்சியாக அம்பாறை மாவட்டம்   மகாஓயா , சென்றல் கேம்ப்  , கல்முனை தலைமையக   பொலிஸ் நிலையத்தில் ஏறத்தாழ  16 ஆண்டுகள் சேவையாற்றியதோடு  பெரும் குற்றப்பிரிவு  , நிர்வாகப்பிரிவு  என கடமையாற்றி   அண்மையில் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் சமுக நிர்வாகப்பிரிவு மற்றும் Record Room போன்ற  கடமைகளை வழக்கு தொடர்பான பொறுப்புக்களில் செயற்பட்டு   தனது சேவையை நிறைவு செய்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement