• Jul 14 2025

3.0 மீற்றர் உயரம் வரை கடல் அலைகள் மேலெழும்; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

Chithra / Jul 13th 2025, 11:37 am
image


பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

இன்று காலை 09.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை  காலை 09.00 மணி வரை செல்லுபடியாகும் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பாலான பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 55-65 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும், என்பதுடன் அந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ இருக்கக்கூடும். 

காலியிலிருந்து கொழும்பு வழியாக புத்தளம் வரையிலான கடற்கரைக்கு அப்பலான பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 50-55 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும், என்பதுடன் அந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் ஓரளவு கொந்தளிப்பாகவோ அல்லது கொந்தளிப்பாகவோ இருக்கக்கூடும். 

புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பாலான கடற்பகுதிகளில் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.5 - 3.0 மீட்டர் வரை அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இதன் காரணமாக, புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான பகுதிகளில் கடல் அலைகள் நிலத்தை அடையும் வாய்ப்பும் இருப்பதாக அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


3.0 மீற்றர் உயரம் வரை கடல் அலைகள் மேலெழும்; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று காலை 09.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை  காலை 09.00 மணி வரை செல்லுபடியாகும் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பாலான பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 55-65 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும், என்பதுடன் அந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ இருக்கக்கூடும். காலியிலிருந்து கொழும்பு வழியாக புத்தளம் வரையிலான கடற்கரைக்கு அப்பலான பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 50-55 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும், என்பதுடன் அந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் ஓரளவு கொந்தளிப்பாகவோ அல்லது கொந்தளிப்பாகவோ இருக்கக்கூடும். புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பாலான கடற்பகுதிகளில் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.5 - 3.0 மீட்டர் வரை அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான பகுதிகளில் கடல் அலைகள் நிலத்தை அடையும் வாய்ப்பும் இருப்பதாக அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement