கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பௌர்ணமி கலை விழா களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(07) மாலை இடம்பெற்றது.
இதன்போது களுதாவளை இரத்தினா நர்த்தனாலயம், பரதாஞ்சலி நாட்டியாலயம், ஸ்ரீ நர்த்தனால கலாமன்றம், தேற்றாத்தீவு திண்ணை ஆற்றுகை கலாமன்றம் போன்ற கலை மன்றங்களால் பயிற்றுவிக்கப்பட்ட கலை நிகழ்வுகள் இதன்போது ஆற்றுகை செய்யப்பட்டன.
பௌர்ணமி தினத்தில் கிரணகமும் சேர்ந்திருந்ததானால் முழு மதியில் கலைகள் ஆற்றுகை செய்யப்பட்டமையானது மனதிற்கும், வளர்ந்து வரும் கலைஞர்களுக்கும் இது ஒரு வாய்ப்பாக அமைந்திருந்ததாக பலர் தெரிவித்திருந்தனர்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உருத்திரன் உதயஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற விழாவில், மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் விரிவுரையாளர் அ.மனேகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன், மேலும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணீதரன், களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் அதிபர் க.சத்தியமோகன், ஆலயங்களின் தலைவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
களுதாவளையில் பௌர்ணமி கலை விழா; கண்கவர் நிகழ்வுகளுடன் கோலாகலம் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பௌர்ணமி கலை விழா களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(07) மாலை இடம்பெற்றது.இதன்போது களுதாவளை இரத்தினா நர்த்தனாலயம், பரதாஞ்சலி நாட்டியாலயம், ஸ்ரீ நர்த்தனால கலாமன்றம், தேற்றாத்தீவு திண்ணை ஆற்றுகை கலாமன்றம் போன்ற கலை மன்றங்களால் பயிற்றுவிக்கப்பட்ட கலை நிகழ்வுகள் இதன்போது ஆற்றுகை செய்யப்பட்டன.பௌர்ணமி தினத்தில் கிரணகமும் சேர்ந்திருந்ததானால் முழு மதியில் கலைகள் ஆற்றுகை செய்யப்பட்டமையானது மனதிற்கும், வளர்ந்து வரும் கலைஞர்களுக்கும் இது ஒரு வாய்ப்பாக அமைந்திருந்ததாக பலர் தெரிவித்திருந்தனர். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உருத்திரன் உதயஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற விழாவில், மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் விரிவுரையாளர் அ.மனேகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன், மேலும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணீதரன், களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் அதிபர் க.சத்தியமோகன், ஆலயங்களின் தலைவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.