• Sep 08 2025

அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட சூதாட்ட விடுதி - பெண்கள் உட்பட 14 பேர் கைது!

Chithra / Sep 8th 2025, 12:58 pm
image


கொழும்பு, மொரட்டுவை - லுனாவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சூதாட்ட விடுதி ஒன்றிலிருந்து 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அங்குலானை பொலிஸார் தெரிவித்தனர்.

11 பெண்களும் 4 ஆண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்குலானை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீண்ட காலமாக முழு நேர வேலையாக இந்த சூதாட்ட விடுதியை நடத்திச் செல்வதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சூதாட்ட விடுதி தினமும் காலை முதல் இரவு வரை இயங்கி வருவதன் காரணமாக பிரதேசவாசிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். 


அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட சூதாட்ட விடுதி - பெண்கள் உட்பட 14 பேர் கைது கொழும்பு, மொரட்டுவை - லுனாவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சூதாட்ட விடுதி ஒன்றிலிருந்து 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அங்குலானை பொலிஸார் தெரிவித்தனர்.11 பெண்களும் 4 ஆண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.அங்குலானை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீண்ட காலமாக முழு நேர வேலையாக இந்த சூதாட்ட விடுதியை நடத்திச் செல்வதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த சூதாட்ட விடுதி தினமும் காலை முதல் இரவு வரை இயங்கி வருவதன் காரணமாக பிரதேசவாசிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement