• Sep 09 2025

ஒரேநாளில் 5000 ரூபாயால் அதிகரித்த தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் இலங்கையர்கள்

Chithra / Sep 9th 2025, 4:02 pm
image

இன்று (09) தங்கம் பவுண் ஒன்றிற்கு 5000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, 293,000 ரூபாயாக விற்பனையாகிய நிலையில், இன்று 5000 ரூபாயால் அதிகரித்து 298,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

அந்தவகையில் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 275,600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,450 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

ஒரேநாளில் 5000 ரூபாயால் அதிகரித்த தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் இலங்கையர்கள் இன்று (09) தங்கம் பவுண் ஒன்றிற்கு 5000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, 293,000 ரூபாயாக விற்பனையாகிய நிலையில், இன்று 5000 ரூபாயால் அதிகரித்து 298,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 275,600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,450 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement