• Sep 08 2025

முச்சக்கரவண்டி கொடுக்காததால் மதுபோதையில் மருமகன் தகராறு; மாமனார் பொல்லால் தாக்கியதில் உயிரிழப்பு!

shanuja / Sep 8th 2025, 1:44 pm
image

முச்சக்கரவண்டி கொடுக்காததால் வீட்டில் தகராறில் ஈடுபட்ட மருமகனை மாமனார் பொல்லால் தாக்கியதில் மருமகன் உயிரிழந்துள்ளார். 


இந்தச் சம்பவம்  காலி - கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்கஹவத்த பிரதேசத்தில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது. 

 

இந்தச் சம்பவத்தில் மொரகொட பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய  நபர் ஒருவரே  கொலை செய்யப்பட்டுள்ளார்.


இந்தச்  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 


சம்பவதினமான நேற்று மருமகன் தனது வீட்டில் நண்பர்களுடன் இணைந்து மதுபானம் அருந்தியுள்ளார்.  


அதன்பின்னர் மதுபோதையில் உள்ள நண்பர்களை அவர்களது வீடுகளுக்கு கொண்டுசென்று விடுவதற்காக மாமனாரிடம் முச்சக்கரவண்டியை கேட்டுள்ளார்.


ஆனால் மாமனார் தனது முச்சக்கரவண்டியை கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த மருமகன் பொல்லால் வீட்டின் கதவை அடித்து உடைத்து மனைவியை தாக்க முயன்றுள்ளார்.


மதுபோதையில் உள்ள மருமகனை தடுப்பதற்காக மாமனார் தனது மருமகனை பொல்லால் தாக்கியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த மருமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


இதனையடுத்து சந்தேக நபரான 58 வயதுடைய  மாமனார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.


கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முச்சக்கரவண்டி கொடுக்காததால் மதுபோதையில் மருமகன் தகராறு; மாமனார் பொல்லால் தாக்கியதில் உயிரிழப்பு முச்சக்கரவண்டி கொடுக்காததால் வீட்டில் தகராறில் ஈடுபட்ட மருமகனை மாமனார் பொல்லால் தாக்கியதில் மருமகன் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம்  காலி - கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்கஹவத்த பிரதேசத்தில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.  இந்தச் சம்பவத்தில் மொரகொட பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய  நபர் ஒருவரே  கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தச்  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சம்பவதினமான நேற்று மருமகன் தனது வீட்டில் நண்பர்களுடன் இணைந்து மதுபானம் அருந்தியுள்ளார்.  அதன்பின்னர் மதுபோதையில் உள்ள நண்பர்களை அவர்களது வீடுகளுக்கு கொண்டுசென்று விடுவதற்காக மாமனாரிடம் முச்சக்கரவண்டியை கேட்டுள்ளார்.ஆனால் மாமனார் தனது முச்சக்கரவண்டியை கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த மருமகன் பொல்லால் வீட்டின் கதவை அடித்து உடைத்து மனைவியை தாக்க முயன்றுள்ளார்.மதுபோதையில் உள்ள மருமகனை தடுப்பதற்காக மாமனார் தனது மருமகனை பொல்லால் தாக்கியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த மருமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இதனையடுத்து சந்தேக நபரான 58 வயதுடைய  மாமனார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement