பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பாக இந்திய குழுவினருடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் இன்றையதினம் (08) பி.ப 03.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் இந்திய துணைத் தூதரக உதவித் தூதுவர் சங்கரன் இராஜகோபாலன், தூதரக அதிகாரிகளான என். ரவிசங்கர், திரு. எம்.பி. பெலியப்பா உள்ளிட்டவர்கள் பங்குபற்றினார்கள்.
இக் கலந்துரையாடலில் அரச அதிபரால் துறைமுக அபிவிருத்தியின் அவசியம், தேவைப்பாடுகள் அதனால் ஏற்படும் சாதகங்கள், மீனவர்களுக்கான நன்மைகள், தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாக விளக்கமளித்து, அபிவிருத்தி தொடர்பாக இந்தியத் தூதரக அதிகரிகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர், பருத்தித்துறை பிரதேச செயலாளர், கரையோரம் பேணல் மற்றும் மூலவள முகாமைத் திணைக்கள பொறியியலாளர், கடற்றொழி்ல் நீரியல் வளத் திணைக்கள உத்தியோகத்தர்கள், மயிலிட்டி மீன்பிடித் துறைமுக முகாமையாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பாக இந்திய குழுவினருடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் இன்றையதினம் (08) பி.ப 03.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.இக் கலந்துரையாடலில் இந்திய துணைத் தூதரக உதவித் தூதுவர் சங்கரன் இராஜகோபாலன், தூதரக அதிகாரிகளான என். ரவிசங்கர், திரு. எம்.பி. பெலியப்பா உள்ளிட்டவர்கள் பங்குபற்றினார்கள். இக் கலந்துரையாடலில் அரச அதிபரால் துறைமுக அபிவிருத்தியின் அவசியம், தேவைப்பாடுகள் அதனால் ஏற்படும் சாதகங்கள், மீனவர்களுக்கான நன்மைகள், தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாக விளக்கமளித்து, அபிவிருத்தி தொடர்பாக இந்தியத் தூதரக அதிகரிகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர், பருத்தித்துறை பிரதேச செயலாளர், கரையோரம் பேணல் மற்றும் மூலவள முகாமைத் திணைக்கள பொறியியலாளர், கடற்றொழி்ல் நீரியல் வளத் திணைக்கள உத்தியோகத்தர்கள், மயிலிட்டி மீன்பிடித் துறைமுக முகாமையாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.