தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் தேயிலை மலையிலிருந்து நேற்றுமுன்தினம் (6) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் நானுஓயா ரதெல்ல வங்கி ஓயா கீழ் பிரிவு தோட்டத்தின் மலையிலிருந்தே ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
நானுஓயா ரதெல்ல வங்கிஓயா கீழ் பிரிவைச் சேர்ந்த 59 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரிய வருகையில்,
குறித்த நபர் காலையில் தேயிலை செடிகளுக்கு உரம் இடுவதற்குச் சென்றுள்ளார். பின்னர் மாலை மேலதிகமாக கொழுந்து பறிக்க சென்றுள்ளார்.
தேயிலை கொழுந்து நிறுக்கும் இடத்திற்கு குறித்த நபர் மிக நேரம் வருகை தராததால் அவருடன் சென்ற ஏனைய தொழிலாளர்கள் அவர் கொழுந்து பறித்த இடத்தை நோக்கி சென்றனர்.
அதன்போதே குறித்த தொழிலாளி சடலமாக இருப்பதை அவதானித்து உடனே நானுஓயாபொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.
தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த நானுஓயா பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தேயிலைக் கொழுந்து பறித்த தொழிலாளி; மலையிலிருந்து சடலமாக மீட்பு தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் தேயிலை மலையிலிருந்து நேற்றுமுன்தினம் (6) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் நானுஓயா ரதெல்ல வங்கி ஓயா கீழ் பிரிவு தோட்டத்தின் மலையிலிருந்தே ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். நானுஓயா ரதெல்ல வங்கிஓயா கீழ் பிரிவைச் சேர்ந்த 59 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இது தொடர்பில் தெரிய வருகையில், குறித்த நபர் காலையில் தேயிலை செடிகளுக்கு உரம் இடுவதற்குச் சென்றுள்ளார். பின்னர் மாலை மேலதிகமாக கொழுந்து பறிக்க சென்றுள்ளார். தேயிலை கொழுந்து நிறுக்கும் இடத்திற்கு குறித்த நபர் மிக நேரம் வருகை தராததால் அவருடன் சென்ற ஏனைய தொழிலாளர்கள் அவர் கொழுந்து பறித்த இடத்தை நோக்கி சென்றனர். அதன்போதே குறித்த தொழிலாளி சடலமாக இருப்பதை அவதானித்து உடனே நானுஓயாபொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த நானுஓயா பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.