• Jan 09 2026

கந்தரோடை விகாரை பெயர்ப்பலகை அகற்றம்!

shanuja / Jan 8th 2026, 2:51 pm
image

சுன்னாகம் சந்தியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விகாரைப் பெயர்ப்பலகை வலிகாமம் தெற்குப் பிரதேச சபையினால் இன்றைய தினம் அகற்றப்பட்டது.


வலிகாமம் தெற்குப் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, 'கந்தரோடை விகாரை' எனப் பொறிக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகை இன்றைய தினம் அகற்றப்பட்டுள்ளது.

 

குறித்த இடத்தை 'கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்' என அடையாளப்படுத்துவதே மிகவும் பொருத்தமானது என சபையில் எடுக்கப்பட்ட முடிவிற்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


அகற்றப்பட்ட பெயர்ப்பலகை காணப்பட்ட அதே இடத்தில், ஒல்லாந்தர் காலத்தில் அமைக்கப்பட்ட சந்தைக் கட்டடத் தொகுதியின் வரலாற்றுச் சிறப்பம்சங்களை விபரிக்கும் வகையிலான புதிய கல்வெட்டுப் பெயர்ப்பலகை ஒன்று மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 


எதிர்காலச் சந்ததியினருக்குச் சரியான வரலாற்றைக் கொண்டு செல்லும் நோக்கிலேயே இந்தப் புதிய பெயர்ப் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கந்தரோடை விகாரை பெயர்ப்பலகை அகற்றம் சுன்னாகம் சந்தியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விகாரைப் பெயர்ப்பலகை வலிகாமம் தெற்குப் பிரதேச சபையினால் இன்றைய தினம் அகற்றப்பட்டது.வலிகாமம் தெற்குப் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, 'கந்தரோடை விகாரை' எனப் பொறிக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகை இன்றைய தினம் அகற்றப்பட்டுள்ளது. குறித்த இடத்தை 'கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்' என அடையாளப்படுத்துவதே மிகவும் பொருத்தமானது என சபையில் எடுக்கப்பட்ட முடிவிற்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அகற்றப்பட்ட பெயர்ப்பலகை காணப்பட்ட அதே இடத்தில், ஒல்லாந்தர் காலத்தில் அமைக்கப்பட்ட சந்தைக் கட்டடத் தொகுதியின் வரலாற்றுச் சிறப்பம்சங்களை விபரிக்கும் வகையிலான புதிய கல்வெட்டுப் பெயர்ப்பலகை ஒன்று மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலச் சந்ததியினருக்குச் சரியான வரலாற்றைக் கொண்டு செல்லும் நோக்கிலேயே இந்தப் புதிய பெயர்ப் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement