• Jan 09 2026

சர்வதேச ரீதியில் பதக்கங்கள் பெற்ற கபடி வீரர் மலேசியா சுற்றில் புறக்கணிப்பு - சிறீநேசன் எம்.பி குற்றச்சாட்டு!

shanuja / Jan 8th 2026, 2:43 pm
image

மட்டக்களப்பில்  கபடியில் தேசிய இடத்தைப்பெற்ற வீரரும் சர்வதேச ரீதியில் புகழை ஈட்டித்தந்த வீரருமான எல்.தனுசன் என்பவர் இம்முறை  மலேசியா சுற்றில் புறக்கணிக்கப்பட்டுள்ளார் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் தெரிவித்துள்ளார். 


பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


மட்டக்களப்பில் கபடியில் தேசிய இடத்தைப்பெற்ற வீர எல்.தனுசன் என்பவர் மலேசியா சுற்றில் புறக்கணிக்கப்பட்டுள்ளார். 


குறித்த வீரர் சர்வதேச ரீதியில் புகழை ஈட்டித்தந்த வீரருமானபாகிஸ்தான், இந்தியா , தென்கொரியா, சீனா போன்ற நாடுகளுக்குச் சென்று பதக்கங்களைப் பெற்றுத்தந்தவர் 


முழு இலங்கையிலும் அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். இருந்தும் மலேசியா சுற்றுக்கான நேர்முகத்தேர்வில் இருந்தவர்கள் அவருடைய திறமையை கவனத்தில் கொள்ளவில்லை. 


மட்டக்களப்பு சம்மேளனத்திற்கு உரிய விதத்தில் அறிவித்தல் வழங்கப்படவில்லை. அறிவித்தல் செய்யாது படியால் உண்மையான சில வீரர்கள் அதில் கலந்துகொள்ள முடியாமல் போயுள்ளது.


எனவே விளையாட்டுத்துறை அமைச்சர் இதனைக் கவனத்திற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். என்றார். 

சர்வதேச ரீதியில் பதக்கங்கள் பெற்ற கபடி வீரர் மலேசியா சுற்றில் புறக்கணிப்பு - சிறீநேசன் எம்.பி குற்றச்சாட்டு மட்டக்களப்பில்  கபடியில் தேசிய இடத்தைப்பெற்ற வீரரும் சர்வதேச ரீதியில் புகழை ஈட்டித்தந்த வீரருமான எல்.தனுசன் என்பவர் இம்முறை  மலேசியா சுற்றில் புறக்கணிக்கப்பட்டுள்ளார் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பில் கபடியில் தேசிய இடத்தைப்பெற்ற வீர எல்.தனுசன் என்பவர் மலேசியா சுற்றில் புறக்கணிக்கப்பட்டுள்ளார். குறித்த வீரர் சர்வதேச ரீதியில் புகழை ஈட்டித்தந்த வீரருமானபாகிஸ்தான், இந்தியா , தென்கொரியா, சீனா போன்ற நாடுகளுக்குச் சென்று பதக்கங்களைப் பெற்றுத்தந்தவர் முழு இலங்கையிலும் அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். இருந்தும் மலேசியா சுற்றுக்கான நேர்முகத்தேர்வில் இருந்தவர்கள் அவருடைய திறமையை கவனத்தில் கொள்ளவில்லை. மட்டக்களப்பு சம்மேளனத்திற்கு உரிய விதத்தில் அறிவித்தல் வழங்கப்படவில்லை. அறிவித்தல் செய்யாது படியால் உண்மையான சில வீரர்கள் அதில் கலந்துகொள்ள முடியாமல் போயுள்ளது.எனவே விளையாட்டுத்துறை அமைச்சர் இதனைக் கவனத்திற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். என்றார். 

Advertisement

Advertisement

Advertisement