• Jan 10 2026

கல்முனையில் கொந்தளிக்கும் கடல் ;பாறி விழுந்த மரம் - பதற்றத்தில் மக்கள்!

shanuja / Jan 9th 2026, 4:18 pm
image

மட்டக்களப்பு - கல்முனை பிரதேச கடற்பரப்பு முழுவதுமாக கொந்தளிப்புடன் காணப்படுகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் பலத்த பதற்றத்துடன் உள்ளனர். 


நாட்டில் மீண்டும் ஓர்  அனர்த்தம் பதிவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


அதிலும் அதிக பாதிப்புக்கள் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இம்முறை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 


அதன்படி மட்டக்களப்பின் பல பகுதிகளில் கனமழையும் காற்றும் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. 


இந்த நிலையில் கல்முனையில் இன்று கடல் மிக மோசமான கொந்தளிப்புடன் காணப்படுகின்றது. கடற்கரைக்கு அண்மித்த பகுதியில் இருந்த தென்னை மரம் ஒன்று பாறி விழுந்துள்ளது. கரையோரப்பகுதியிலுள்ள கட்டடங்களும் பலத்த சேதமடைந்துள்ளன.


கடல் கொந்தளிப்பை அவதானிக்கையில் மீண்டும் ஓர் புயல் ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் பெரும் பதற்றமடைந்துள்ளனர். 


டித்வா புயலால் ஏற்பட்ட உயிரிழப்புக்களைத் தாண்டி அதன் தாக்கங்கள் இன்னும் முடிவடையாதுள்ள நிலையில் மீண்டும் ஒரு அனர்த்தம் ஏற்படின் மக்களை பெரிதும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்முனையில் கொந்தளிக்கும் கடல் ;பாறி விழுந்த மரம் - பதற்றத்தில் மக்கள் மட்டக்களப்பு - கல்முனை பிரதேச கடற்பரப்பு முழுவதுமாக கொந்தளிப்புடன் காணப்படுகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் பலத்த பதற்றத்துடன் உள்ளனர். நாட்டில் மீண்டும் ஓர்  அனர்த்தம் பதிவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் அதிக பாதிப்புக்கள் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இம்முறை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மட்டக்களப்பின் பல பகுதிகளில் கனமழையும் காற்றும் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்முனையில் இன்று கடல் மிக மோசமான கொந்தளிப்புடன் காணப்படுகின்றது. கடற்கரைக்கு அண்மித்த பகுதியில் இருந்த தென்னை மரம் ஒன்று பாறி விழுந்துள்ளது. கரையோரப்பகுதியிலுள்ள கட்டடங்களும் பலத்த சேதமடைந்துள்ளன.கடல் கொந்தளிப்பை அவதானிக்கையில் மீண்டும் ஓர் புயல் ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் பெரும் பதற்றமடைந்துள்ளனர். டித்வா புயலால் ஏற்பட்ட உயிரிழப்புக்களைத் தாண்டி அதன் தாக்கங்கள் இன்னும் முடிவடையாதுள்ள நிலையில் மீண்டும் ஒரு அனர்த்தம் ஏற்படின் மக்களை பெரிதும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement