• Jan 10 2026

வல்வெட்டித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்களில் "லஞ்ச் சீற்"பயன்பாடு தடை!

dileesiya / Jan 9th 2026, 5:46 pm
image

வல்வெட்டித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்களில் "லஞ்ச் சீற்" பயன்படுத்த முற்றாக தடை செய்யப்படுவதாகவும் அதனை மீறி செயற்படும் உணவகங்களின் வியாபார உரிமம் இடைநிறுத்தப்படும் எனவும் வல்வெட்டித்துறை நகரசபை அறிவித்துள்ளது. 


வல்வெட்டித்துறை நகரபிதா எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வழிகாட்டுதலில் நகராட்சி மன்றத்தின் எல்லைக்குட்பட்ட உணவு கையாளும் நிலையங்களினது உரிமையாளர்களுக்கான கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


லஞ்சீற் பாவனையை முற்றாகத்தடை செய்யும் முகமாக வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொது மண்டபத்தில் இன்றைய தினம் (09) கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. 


உபதவிசாளர் தலமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சகல உணவு கையாளும் நிலையங்களிலும், திருமண மண்டபங்களிலும், அன்னதான மடங்களிலும் லஞ்சீற் பாவனை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதுடன் அதனை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வியாபார உரிமம் இடைநிறுத்தப்படும் எனவும் கூறப்பட்டது. 


குறித்த நடைமுறை உடனடியாக அமுல்படுத்தப்படுகின்ற போதிலும் வரும் 15 ஆம் திகதி வரை மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் அவகாசம் வழங்கப்படும் எனவும் ஜனவரி 16 முதல் முற்றுமுழதாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லஞ்சீற் பாவனை தடை தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரமும் இதன் போது உணவக உரிமையாளர்களிற்கு விநியோகிக்கப்பட்டது.


இதன்போது 2026 ஆம் ஆண்டிற்கான வியாபார உரிமங்கள் மார்ச் 31 இற்கு முன்னர் அனைவரும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. 


இக்கலந்துரையாடலில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஸ் கலந்து கொண்டு உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.


வடக்கு மாகாணத்தில் "லஞ்ச் சீற்" பாவனையை முற்றுமுழுதாக தடை செய்வதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் கடந்த 01 முதல் முதல் பருத்தித்துறை நகரசபை அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


வல்வெட்டித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்களில் "லஞ்ச் சீற்"பயன்பாடு தடை வல்வெட்டித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்களில் "லஞ்ச் சீற்" பயன்படுத்த முற்றாக தடை செய்யப்படுவதாகவும் அதனை மீறி செயற்படும் உணவகங்களின் வியாபார உரிமம் இடைநிறுத்தப்படும் எனவும் வல்வெட்டித்துறை நகரசபை அறிவித்துள்ளது. வல்வெட்டித்துறை நகரபிதா எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வழிகாட்டுதலில் நகராட்சி மன்றத்தின் எல்லைக்குட்பட்ட உணவு கையாளும் நிலையங்களினது உரிமையாளர்களுக்கான கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.லஞ்சீற் பாவனையை முற்றாகத்தடை செய்யும் முகமாக வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொது மண்டபத்தில் இன்றைய தினம் (09) கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. உபதவிசாளர் தலமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சகல உணவு கையாளும் நிலையங்களிலும், திருமண மண்டபங்களிலும், அன்னதான மடங்களிலும் லஞ்சீற் பாவனை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதுடன் அதனை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வியாபார உரிமம் இடைநிறுத்தப்படும் எனவும் கூறப்பட்டது. குறித்த நடைமுறை உடனடியாக அமுல்படுத்தப்படுகின்ற போதிலும் வரும் 15 ஆம் திகதி வரை மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் அவகாசம் வழங்கப்படும் எனவும் ஜனவரி 16 முதல் முற்றுமுழதாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லஞ்சீற் பாவனை தடை தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரமும் இதன் போது உணவக உரிமையாளர்களிற்கு விநியோகிக்கப்பட்டது.இதன்போது 2026 ஆம் ஆண்டிற்கான வியாபார உரிமங்கள் மார்ச் 31 இற்கு முன்னர் அனைவரும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இக்கலந்துரையாடலில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஸ் கலந்து கொண்டு உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.வடக்கு மாகாணத்தில் "லஞ்ச் சீற்" பாவனையை முற்றுமுழுதாக தடை செய்வதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் கடந்த 01 முதல் முதல் பருத்தித்துறை நகரசபை அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement