• Jan 10 2026

சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான மூன்று நாள் தேசிய வேலைத்திட்டம் !

dileesiya / Jan 9th 2026, 5:00 pm
image

க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தூய்மையான நகரம் - ஆரோக்கியமான வாழ்கை எனும் தலைப்பில் பேரிடருக்குப் பின்னரான  சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான மூன்று நாள் தேசிய வேலைத்திட்டம்  (07) நாடாளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இதன் தொடர் மூன்றாவது நாளாக மூதூர் பிரதேச சபை மற்றும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை  இணைந்து இன்று (09) காலை 8:30 மணிக்கு பாடசாலைகள், மதஸ்தலங்களில் டெங்கு பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


இப்பரிசோதனை நடவடிக்கையில் படையினர் ,மூதூர் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், டெங்கு ஒழிப்பு பிரிவினர்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரஜா சக்தி தவிசாளர்கள் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. 


இதன்போது டெங்கு பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்தோருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுடப்பட்டதோடு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.


பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயற்படுத்தலின் கீழ் இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான மூன்று நாள் தேசிய வேலைத்திட்டம் க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தூய்மையான நகரம் - ஆரோக்கியமான வாழ்கை எனும் தலைப்பில் பேரிடருக்குப் பின்னரான  சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான மூன்று நாள் தேசிய வேலைத்திட்டம்  (07) நாடாளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதன் தொடர் மூன்றாவது நாளாக மூதூர் பிரதேச சபை மற்றும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை  இணைந்து இன்று (09) காலை 8:30 மணிக்கு பாடசாலைகள், மதஸ்தலங்களில் டெங்கு பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இப்பரிசோதனை நடவடிக்கையில் படையினர் ,மூதூர் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், டெங்கு ஒழிப்பு பிரிவினர்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரஜா சக்தி தவிசாளர்கள் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது டெங்கு பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்தோருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுடப்பட்டதோடு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயற்படுத்தலின் கீழ் இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement