• Jan 10 2026

‘பராசக்தி’ திரைப்படம் பேசும் போராட்ட வரலாறு !

dileesiya / Jan 9th 2026, 3:22 pm
image

1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டை உலுக்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் பின்னணியையும், அதில் நிகழ்ந்த பொள்ளாச்சி துப்பாக்கிச் சூடு சம்பவத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது சுதா கொங்குரா இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘பராசக்தி’ திரைப்படம். 

இந்தப் போராட்டம் மொழி உரிமை மட்டுமல்ல, அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது.

தமிழ்நாட்டில் கிந்தி கட்டாயத்திற்கு எதிரான எதிர்ப்பு 1930 களிலேயே தொடங்கியது. 1937ஆம் ஆண்டு ராஜாஜி தலைமையிலான அரசு பள்ளிகளில்  கிந்தியை கட்டாயமாக்கியபோது, நீதிக் கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் கடும் போராட்டங்களை முன்னெடுத்தன. இதன் விளைவாக 1940ஆம் ஆண்டு இந்தி கட்டாயம் திரும்பப் பெறப்பட்டது.

1948 ஆம் ஆண்டிலும், 1960களின் தொடக்கத்திலும் கிந்தி அலுவல் மொழியாக மாறும் அச்சம் மீண்டும் எழுந்தது. 

1965 ஜனவரி 26க்குப் பிறகுகிந்தி மட்டுமே மத்திய அரசின் அலுவல் மொழியாகும் என்ற அரசியல் சூழல், தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. திமுக உள்ளிட்ட அமைப்புகள் போராட்டங்களை தீவிரப்படுத்தின.

1965 பிப்ரவரி 12ஆம் தேதி, முழு அடைப்பின்போது பொள்ளாச்சியில் நடந்த துப்பாக்கிச் சூடு இந்தப் போராட்டத்தின் மிகக் கொடூரமான தருணமாக அமைந்தது. 

தபால் நிலையங்களில் இருந்த கிந்தி எழுத்துகளை அகற்ற முயன்ற மாணவர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே ஏற்பட்ட மோதல், பின்னர் ராணுவ துப்பாக்கிச் சூடாக மாறியது.

இந்தச் சம்பவத்தில் நான்கு வயது குழந்தை உட்பட பலர் உயிரிழந்தனர்

உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து துல்லியமான தகவல்கள் இல்லை

வரலாற்றாசிரியர்கள் கணிப்பில் 80 முதல் 100 பேர் வரை உயிரிழந்திருக்கலாம்

பொள்ளாச்சி துப்பாக்கிச் சூடு, கிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் இருண்ட நினைவாகவும், மொழி உரிமை போராட்டத்தின் விலையையும் நினைவூட்டும் சம்பவமாகவும் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ‘பராசக்தி’ திரைப்படம், அந்த கால அரசியல்-சமூக சூழலை புதிய தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறது.

‘பராசக்தி’ திரைப்படம் பேசும் போராட்ட வரலாறு 1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டை உலுக்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் பின்னணியையும், அதில் நிகழ்ந்த பொள்ளாச்சி துப்பாக்கிச் சூடு சம்பவத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது சுதா கொங்குரா இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘பராசக்தி’ திரைப்படம். இந்தப் போராட்டம் மொழி உரிமை மட்டுமல்ல, அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது.தமிழ்நாட்டில் கிந்தி கட்டாயத்திற்கு எதிரான எதிர்ப்பு 1930 களிலேயே தொடங்கியது. 1937ஆம் ஆண்டு ராஜாஜி தலைமையிலான அரசு பள்ளிகளில்  கிந்தியை கட்டாயமாக்கியபோது, நீதிக் கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் கடும் போராட்டங்களை முன்னெடுத்தன. இதன் விளைவாக 1940ஆம் ஆண்டு இந்தி கட்டாயம் திரும்பப் பெறப்பட்டது.1948 ஆம் ஆண்டிலும், 1960களின் தொடக்கத்திலும் கிந்தி அலுவல் மொழியாக மாறும் அச்சம் மீண்டும் எழுந்தது. 1965 ஜனவரி 26க்குப் பிறகுகிந்தி மட்டுமே மத்திய அரசின் அலுவல் மொழியாகும் என்ற அரசியல் சூழல், தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. திமுக உள்ளிட்ட அமைப்புகள் போராட்டங்களை தீவிரப்படுத்தின.1965 பிப்ரவரி 12ஆம் தேதி, முழு அடைப்பின்போது பொள்ளாச்சியில் நடந்த துப்பாக்கிச் சூடு இந்தப் போராட்டத்தின் மிகக் கொடூரமான தருணமாக அமைந்தது. தபால் நிலையங்களில் இருந்த கிந்தி எழுத்துகளை அகற்ற முயன்ற மாணவர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே ஏற்பட்ட மோதல், பின்னர் ராணுவ துப்பாக்கிச் சூடாக மாறியது.இந்தச் சம்பவத்தில் நான்கு வயது குழந்தை உட்பட பலர் உயிரிழந்தனர்உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து துல்லியமான தகவல்கள் இல்லைவரலாற்றாசிரியர்கள் கணிப்பில் 80 முதல் 100 பேர் வரை உயிரிழந்திருக்கலாம்பொள்ளாச்சி துப்பாக்கிச் சூடு, கிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் இருண்ட நினைவாகவும், மொழி உரிமை போராட்டத்தின் விலையையும் நினைவூட்டும் சம்பவமாகவும் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ‘பராசக்தி’ திரைப்படம், அந்த கால அரசியல்-சமூக சூழலை புதிய தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறது.

Advertisement

Advertisement

Advertisement