• Jan 10 2026

கிளிநொச்சியில் ஆடு திருடர்கள் கைது!

dileesiya / Jan 9th 2026, 6:09 pm
image

கிளிநொச்சி மாவட்டத்தின் பல நாள் ஆடுகளை திருடிய திருடர்களை  பொலிசார் கைது செய்துள்ளனர்.


கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம்  பிரிவுக்கு உட்பட்ட பல பகுதிகளில் இரவு வேளைகளில் வீதிகளில் மற்றும் ஆள் நடமாட்டம் அற்ற பகுதிகளில் உள்ள ஆடுகளை மோட்டார் சைக்கிளின் மூலம் இராமநாதபுரம் பொலிஸ்  பிரிவுக்கு உட்பட்ட பகுதிக்கு கொண்டு சென்று ஆட்டின் பெறுமதியை விட அரைவாசி  விலைக்கு விற்று வந்த நிலையில் ஆட்டின் உரிமையாளர்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டினைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிசார்   நேற்றைய  தினம் (08). இரண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர். 


இரண்டு சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் குறித்த 05ஆடுகள் ஆட்டு உரிமையாளரினால் இனங்காட்டப்பட்டதை அடுத்து தருமபுரம்  பொலிசாரால் குறித்த ஐந்து ஆடும்  மீட்கப்பட்டுள்ளது. 


சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  எம். திசாநாயக்க தெரிவித்துள்ளார்

கிளிநொச்சியில் ஆடு திருடர்கள் கைது கிளிநொச்சி மாவட்டத்தின் பல நாள் ஆடுகளை திருடிய திருடர்களை  பொலிசார் கைது செய்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம்  பிரிவுக்கு உட்பட்ட பல பகுதிகளில் இரவு வேளைகளில் வீதிகளில் மற்றும் ஆள் நடமாட்டம் அற்ற பகுதிகளில் உள்ள ஆடுகளை மோட்டார் சைக்கிளின் மூலம் இராமநாதபுரம் பொலிஸ்  பிரிவுக்கு உட்பட்ட பகுதிக்கு கொண்டு சென்று ஆட்டின் பெறுமதியை விட அரைவாசி  விலைக்கு விற்று வந்த நிலையில் ஆட்டின் உரிமையாளர்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டினைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிசார்   நேற்றைய  தினம் (08). இரண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர். இரண்டு சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் குறித்த 05ஆடுகள் ஆட்டு உரிமையாளரினால் இனங்காட்டப்பட்டதை அடுத்து தருமபுரம்  பொலிசாரால் குறித்த ஐந்து ஆடும்  மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  எம். திசாநாயக்க தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement