வவுனியா பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து வியாபாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற நிறுவனம்(incubation center) ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல்.முகமட் நவாவி தெரிவித்துள்ளார்.
வவுனியா பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தாவது,
விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சானது, இலங்கையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்களுக்கு பொறுப்பாக இருக்கின்றது.
இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் அங்கு கடமையாற்றுகின்ற விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் நாட்டின் அபிவிருத்தி உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த ஆராய்ச்சிகள் பெரும்பாலும் அவர்களுடைய கற்கைநெறிகளோடு நிறைவு பெறுவதை காணக்கூடியதாக உள்ளது.
குறிப்பாக நாட்டின் அபிவிருத்திக்கு ஆராய்ச்சிகள் முக்கியமானதாக காணப்படுகின்றது. அவை வணிகமயமாகும் போதே நாட்டின் அபிவிருத்திக்கு அது பங்களிப்பு வழங்கும். அதற்கான வாய்ப்புக்கள் இலங்கையில் மிகவும் குறைவாக காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
அந்த வகையில் தற்போதைய அரசாங்கம் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் ஊடாக ஆராய்ச்சி மூலமாக பெறப்பட்ட முடிவுகளை அபிவிருத்திக்கு பயன்படுத்தவதனை நோக்காககொண்டு பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
அந்தவகையில் ஆராய்ச்சியாளர்களுக்கும், அவற்றை பயன்படுத்துகின்ற தொழில் முனைவோருக்கும் ஒத்துழைப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டு
“வியாபாரத்திற்கு ஒத்துழைப்புவழங்குகின்ற நிறுவனங்களை”(incubation center) பல்கலைக்கழகங்களை மையமாக வைத்து ஆரம்பிப்பதற்கான ஏற்ப்பாடுகளை செய்து வருகின்றது.
அந்தவகையில் இலங்கையில் வவுனியாபல்கலைக்கழகம்,கிழக்குபல்கலைகழகம்,ருகுணு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இவ்வாறான மூன்று மையங்களை அமைச்சுடன் இணைந்து ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்து அதனை மக்கள் மயப்படுத்துவதற்கான ஏற்ப்பாடுகளை செய்துள்ளோம்.
எனவே எதிர்வரும் 23 ஆம் திகதி வவுனியா நகருக்கு அண்மையில் உள்ள வவுனியா பல்கலைக்கழக வளாககட்டடத்தில் இவ்வாறான மையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து அமைச்சுக்களினதும் ஒத்துழைப்பையும் பெற்றுள்ளோம். அந்தவகையில் முதலாவது பல்கலைக்கழத்தோடு இணைந்த வியாபாரத்திற்கு ஒத்துழைப்புவழங்கும் மையத்தை வவுனியாவில் ஆரம்பிக்கப்போகின்றோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் என தெரிவித்தார்.
வவுனியாவில் வியாபார ஒத்துழைப்பு மையம் உருவாக்கம் வவுனியா பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து வியாபாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற நிறுவனம்(incubation center) ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல்.முகமட் நவாவி தெரிவித்துள்ளார்.வவுனியா பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தாவது,விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சானது, இலங்கையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்களுக்கு பொறுப்பாக இருக்கின்றது. இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் அங்கு கடமையாற்றுகின்ற விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் நாட்டின் அபிவிருத்தி உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த ஆராய்ச்சிகள் பெரும்பாலும் அவர்களுடைய கற்கைநெறிகளோடு நிறைவு பெறுவதை காணக்கூடியதாக உள்ளது.குறிப்பாக நாட்டின் அபிவிருத்திக்கு ஆராய்ச்சிகள் முக்கியமானதாக காணப்படுகின்றது. அவை வணிகமயமாகும் போதே நாட்டின் அபிவிருத்திக்கு அது பங்களிப்பு வழங்கும். அதற்கான வாய்ப்புக்கள் இலங்கையில் மிகவும் குறைவாக காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. அந்த வகையில் தற்போதைய அரசாங்கம் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் ஊடாக ஆராய்ச்சி மூலமாக பெறப்பட்ட முடிவுகளை அபிவிருத்திக்கு பயன்படுத்தவதனை நோக்காககொண்டு பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அந்தவகையில் ஆராய்ச்சியாளர்களுக்கும், அவற்றை பயன்படுத்துகின்ற தொழில் முனைவோருக்கும் ஒத்துழைப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டு “வியாபாரத்திற்கு ஒத்துழைப்புவழங்குகின்ற நிறுவனங்களை”(incubation center) பல்கலைக்கழகங்களை மையமாக வைத்து ஆரம்பிப்பதற்கான ஏற்ப்பாடுகளை செய்து வருகின்றது. அந்தவகையில் இலங்கையில் வவுனியாபல்கலைக்கழகம்,கிழக்குபல்கலைகழகம்,ருகுணு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இவ்வாறான மூன்று மையங்களை அமைச்சுடன் இணைந்து ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்து அதனை மக்கள் மயப்படுத்துவதற்கான ஏற்ப்பாடுகளை செய்துள்ளோம். எனவே எதிர்வரும் 23 ஆம் திகதி வவுனியா நகருக்கு அண்மையில் உள்ள வவுனியா பல்கலைக்கழக வளாககட்டடத்தில் இவ்வாறான மையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து அமைச்சுக்களினதும் ஒத்துழைப்பையும் பெற்றுள்ளோம். அந்தவகையில் முதலாவது பல்கலைக்கழத்தோடு இணைந்த வியாபாரத்திற்கு ஒத்துழைப்புவழங்கும் மையத்தை வவுனியாவில் ஆரம்பிக்கப்போகின்றோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் என தெரிவித்தார்.