கணவன் தகாத உறவை அறிந்த மனைவி ஆத்திரமடைந்து கத்தியை எடுத்து கணவனைத் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் வரங்கல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தனது கணவரின் கள்ளத்தொடர்பை அறிந்து, கோபத்தில் கத்தியை எடுத்துக் கொண்டு கணவரின் நகைக் கடைக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற குறித்த பெண், தனது சொத்துக்களில் தனக்கு உரிய பங்கு மற்றும் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பைக் கோரி கத்தத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் பின்னர் கணவரின் தகாத உறவால் ஆத்திரமடைந்த பெண், கத்தியால் அவரைத் தாக்க முயன்றுள்ளார். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தெலுங்கானா பொலிஸார், அந்தப் பெண்ணிடமிருந்து கத்தியைப் பாதுகாப்பாகப் பறித்தனர்.
இதைத் தொடர்ந்து, அவர் சாலையில் அமர்ந்து தனது போராட்டத்தைத் தொடர்ந்தார். இதனால் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் மேலும் பாதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் உயிருக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணின் செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதனையடுத்து தெலுங்கானா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கணவனின் தகாத உறவை அறிந்து கத்தியால் தாக்க முயன்ற மனைவி; தடுத்து நிறுத்திய பொலிஸார் கணவன் தகாத உறவை அறிந்த மனைவி ஆத்திரமடைந்து கத்தியை எடுத்து கணவனைத் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் வரங்கல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தனது கணவரின் கள்ளத்தொடர்பை அறிந்து, கோபத்தில் கத்தியை எடுத்துக் கொண்டு கணவரின் நகைக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற குறித்த பெண், தனது சொத்துக்களில் தனக்கு உரிய பங்கு மற்றும் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பைக் கோரி கத்தத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் பின்னர் கணவரின் தகாத உறவால் ஆத்திரமடைந்த பெண், கத்தியால் அவரைத் தாக்க முயன்றுள்ளார். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தெலுங்கானா பொலிஸார், அந்தப் பெண்ணிடமிருந்து கத்தியைப் பாதுகாப்பாகப் பறித்தனர். இதைத் தொடர்ந்து, அவர் சாலையில் அமர்ந்து தனது போராட்டத்தைத் தொடர்ந்தார். இதனால் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் மேலும் பாதிக்கப்பட்டது.இந்தச் சம்பவத்தில் உயிருக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணின் செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனையடுத்து தெலுங்கானா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.