மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி முகத்துவாரம் இன்று ( 09 ) தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலையீட்டில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கமைய வெட்டப்பட்டது.
இந்த முகத்துவாரம் வெட்டப்படுவதன் மூலம் களுவாஞ்சிக்குடி, ஒந்தாச்சிமடம், களுதாவளை போன்ற கிராமங்களின் , நீரில் மூழ்கிய கரையோரப்பகுதிகளில் உள்ள வெள்ள நீர் வழிந்தோடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் JCB இயந்திரம் மூலம் முகத்துவாரம் வெட்டப்பட்டு, நீர் வடிந்தோடச்செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.
வெட்டப்பட்ட களுவாஞ்சிக்குடி முகத்துவாரம் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி முகத்துவாரம் இன்று ( 09 ) தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலையீட்டில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கமைய வெட்டப்பட்டது.இந்த முகத்துவாரம் வெட்டப்படுவதன் மூலம் களுவாஞ்சிக்குடி, ஒந்தாச்சிமடம், களுதாவளை போன்ற கிராமங்களின் , நீரில் மூழ்கிய கரையோரப்பகுதிகளில் உள்ள வெள்ள நீர் வழிந்தோடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் JCB இயந்திரம் மூலம் முகத்துவாரம் வெட்டப்பட்டு, நீர் வடிந்தோடச்செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.