இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க, தமிழக மாநில அரசின் சிறு துறைமுகங்கள் திணைக்களம் ஊடாக 118 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இராமேஸ்வரம் துறைமுகத்தை சீரமைக்க, 6.24 கோடி ரூபாயில் மத்திய அரசின் ஊடாக பணிகள் நடந்து வருவதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், மத்திய அரசாங்கத்திடம் இருந்து இன்னும் சேவைக்கான அனுமதி கிடைக்கவில்லை.
அதேநேரம், தலைமன்னாரிலும் கப்பல் சேவைக்கான ஆயத்தப்பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என தமிழக அரச தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்து சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க, தமிழக மாநில அரசின் சிறு துறைமுகங்கள் திணைக்களம் ஊடாக 118 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இராமேஸ்வரம் துறைமுகத்தை சீரமைக்க, 6.24 கோடி ரூபாயில் மத்திய அரசின் ஊடாக பணிகள் நடந்து வருவதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மத்திய அரசாங்கத்திடம் இருந்து இன்னும் சேவைக்கான அனுமதி கிடைக்கவில்லை. அதேநேரம், தலைமன்னாரிலும் கப்பல் சேவைக்கான ஆயத்தப்பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என தமிழக அரச தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.