• Sep 06 2025

இலங்கையில் உரிமத் தகடுகள் இல்லாத ஒரு லட்சம் புதிய வாகனங்கள்

Aathira / Sep 6th 2025, 10:04 am
image

கடந்த 8 மாதங்களில் இலங்கையில் மொத்தம் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 586 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இதில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 745 மோட்டார் சைக்கிள்கள் அடங்கும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. 

வாகன எண் தகடுகள் அச்சிடுதல் பணிகள் ஆறு மாதங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

இதனால் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் ஒரு லட்சம் போல பேருக்கு எண் தகடுகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், எண் தகடுகள் அச்சிடும் பணியை தனியார் நிறுவனத்திற்கு தள்ளுபடி செய்து வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், இத்தகவலை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

எண் தகடுகள் அச்சிடப்பட்டதின் நிறுத்தம் காரணமாக வணிகங்களின் கட்டணங்களும் பெரும்பான்மையாக அதிகரித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உரிமத் தகடுகள் இல்லாத ஒரு லட்சம் புதிய வாகனங்கள் கடந்த 8 மாதங்களில் இலங்கையில் மொத்தம் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 586 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 745 மோட்டார் சைக்கிள்கள் அடங்கும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. வாகன எண் தகடுகள் அச்சிடுதல் பணிகள் ஆறு மாதங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் ஒரு லட்சம் போல பேருக்கு எண் தகடுகள் கிடைக்கவில்லை.இந்நிலையில், எண் தகடுகள் அச்சிடும் பணியை தனியார் நிறுவனத்திற்கு தள்ளுபடி செய்து வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், இத்தகவலை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.எண் தகடுகள் அச்சிடப்பட்டதின் நிறுத்தம் காரணமாக வணிகங்களின் கட்டணங்களும் பெரும்பான்மையாக அதிகரித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement