• Sep 06 2025

சுற்றுலாவிற்குச் சென்று நண்பருடன் மது அருந்திய நபர்; சுற்றுலா விடுதியில் சடலமாக மீட்பு!

shanuja / Sep 6th 2025, 6:05 pm
image

ஹட்டன் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின் அறையொன்றில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


கொழும்பு பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ரியான்சி பிள்ளை என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த நபர்  சுற்றுலா இடங்களைக் கண்டு களிக்கச் சென்றுள்ளார்.  இதன்போது,நேற்று (05) மதியம்  குறித்த சுற்றுலா விடுதியில் தனது நண்பருடன் மது அருந்திவிட்டு  கீழே விழுந்து கிடந்துள்ளார்.


கீழே விழுந்த நபரை மீண்டும் அறைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். எனினும், இன்று காலை குறித்த நபர் அறையை விட்டு வெளியே வரவில்லை என்பதால், விடுதி ஊழியர் ஒருவர் இது குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு அறிவித்தார். 


தகவலையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார், விடுதி  அறைக்குள்  குறித்த நபர் உயிரிழந்து காணப்பட்டதை அவதானித்தனர். 


அதன்பின்னர் சடலத்தை மீட்ட பொலிஸார் சடலம் மீதான நீதவான் விசாரணையை மேற்கொண்டனர். 


சடலம் ஹட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


அதனையடுத்து உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலாவிற்குச் சென்று நண்பருடன் மது அருந்திய நபர்; சுற்றுலா விடுதியில் சடலமாக மீட்பு ஹட்டன் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின் அறையொன்றில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கொழும்பு பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ரியான்சி பிள்ளை என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த நபர்  சுற்றுலா இடங்களைக் கண்டு களிக்கச் சென்றுள்ளார்.  இதன்போது,நேற்று (05) மதியம்  குறித்த சுற்றுலா விடுதியில் தனது நண்பருடன் மது அருந்திவிட்டு  கீழே விழுந்து கிடந்துள்ளார்.கீழே விழுந்த நபரை மீண்டும் அறைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். எனினும், இன்று காலை குறித்த நபர் அறையை விட்டு வெளியே வரவில்லை என்பதால், விடுதி ஊழியர் ஒருவர் இது குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு அறிவித்தார். தகவலையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார், விடுதி  அறைக்குள்  குறித்த நபர் உயிரிழந்து காணப்பட்டதை அவதானித்தனர். அதன்பின்னர் சடலத்தை மீட்ட பொலிஸார் சடலம் மீதான நீதவான் விசாரணையை மேற்கொண்டனர். சடலம் ஹட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.அதனையடுத்து உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement