• Aug 20 2025

ஒருபுறம் ஹர்த்தால் மறுபுறம் பிள்ளையானின் பிறந்நாள் கொண்டாட்டம்

Chithra / Aug 19th 2025, 7:49 am
image


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் 50 ஆவது பிறந்த தினம் வாகரை பணிச்சங்கேணியில் பல்வேறுபட்ட நிகழ்வுகளுடன் நேற்று கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்வுகளை கோறளைப்பற்று   வடக்கு வாகரை பிரதேச தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வி, கலை, கலாச்சார பிரிவனரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது 'உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்' எனும் தொணிப் பொருளில் இரத்தான நிகழ்வு நடைபெற்றது. பலர் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.

அத்துடன் பணிச்சங்கேணி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட பூசையும் அன்னதான நிகழ்வும் நடைபெற்றது.

குறிப்பாக அவரது 50 ஆவது அகவையினை முன்னிட்டு ஆதாரவாளர்களால் 50 மண் பானைகளில் பொங்கலிட்டு சுவாமிக்கு படைத்து வழிபட்டனர்.

இதன்போது அவரது தயார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சிவநேசதுரை சந்திரகாந்தன் ஈஸ்டர் குண்டு தாக்குதல் மற்றும் கிழக்கு பல்கலைக் கழக உபவேந்தர் ரவிந்திரநாத்தின் படு கொலை தொடர்பாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒருபுறம் ஹர்த்தால் மறுபுறம் பிள்ளையானின் பிறந்நாள் கொண்டாட்டம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் 50 ஆவது பிறந்த தினம் வாகரை பணிச்சங்கேணியில் பல்வேறுபட்ட நிகழ்வுகளுடன் நேற்று கொண்டாடப்பட்டது.இந் நிகழ்வுகளை கோறளைப்பற்று   வடக்கு வாகரை பிரதேச தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வி, கலை, கலாச்சார பிரிவனரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதன்போது 'உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்' எனும் தொணிப் பொருளில் இரத்தான நிகழ்வு நடைபெற்றது. பலர் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.அத்துடன் பணிச்சங்கேணி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட பூசையும் அன்னதான நிகழ்வும் நடைபெற்றது.குறிப்பாக அவரது 50 ஆவது அகவையினை முன்னிட்டு ஆதாரவாளர்களால் 50 மண் பானைகளில் பொங்கலிட்டு சுவாமிக்கு படைத்து வழிபட்டனர்.இதன்போது அவரது தயார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.சிவநேசதுரை சந்திரகாந்தன் ஈஸ்டர் குண்டு தாக்குதல் மற்றும் கிழக்கு பல்கலைக் கழக உபவேந்தர் ரவிந்திரநாத்தின் படு கொலை தொடர்பாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement