• Aug 14 2025

கொத்து ரொட்டி, முட்டை, அப்பம் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!

Egg
shanuja / Aug 14th 2025, 9:26 am
image

கொத்து ரொட்டி, முட்டை அப்பம் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது என்று நுகர்வோர் தெரிவித்துள்ளனர். 

 


முட்டை மற்றும் பிற மூலப்பொருட்களின் விலை குறைந்திருந்தாலும், கொத்து ரொட்டி, முட்டை அப்பம் மற்றும் முட்டை சார்ந்து உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளும் மிகவும் அதிகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர். 

 

அதன்படி ஒரு முட்டையின் விலை 29 ரூபா  முதல் 33 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. 


 இந்த நிலையில், பல்வேறு உணவகங்களில் கொத்து ரொட்டியின் விலை மிக அதிகமாக இருப்பதாகவும், முட்டை அப்பம் மற்றும் முட்டை ரொட்டியின் விலை சமமாகவும் அதிகமாகவும் இருப்பதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். 

 

எனவே உடனடியாக நுகர்வோர் அதிகார சபை இது தொடர்பில் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு சலுகைத் திட்டங்களை வகுக்க வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொத்து ரொட்டி, முட்டை, அப்பம் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரிப்பு கொத்து ரொட்டி, முட்டை அப்பம் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது என்று நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.  முட்டை மற்றும் பிற மூலப்பொருட்களின் விலை குறைந்திருந்தாலும், கொத்து ரொட்டி, முட்டை அப்பம் மற்றும் முட்டை சார்ந்து உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளும் மிகவும் அதிகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்.  அதன்படி ஒரு முட்டையின் விலை 29 ரூபா  முதல் 33 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.  இந்த நிலையில், பல்வேறு உணவகங்களில் கொத்து ரொட்டியின் விலை மிக அதிகமாக இருப்பதாகவும், முட்டை அப்பம் மற்றும் முட்டை ரொட்டியின் விலை சமமாகவும் அதிகமாகவும் இருப்பதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.  எனவே உடனடியாக நுகர்வோர் அதிகார சபை இது தொடர்பில் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு சலுகைத் திட்டங்களை வகுக்க வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement