• Aug 19 2025

நடுவானில் தீப்பற்றிய விமானம்; பயணிகள் அலறல்! நூலிழையில் தப்பிய உயிர்கள்

Chithra / Aug 19th 2025, 7:52 am
image

கிரீஸில் இருந்து ஜெர்மனி சென்ற போயிங் 757 விமானம் நடுவானில் தீப்பற்றியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் விமானம் அவசரமாக இத்தாலிக்கு திருப்பிவிடப்பட்டதுடன், பயணிகள் பாதுகாப்பாக தரை இறங்கப்படதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், 

கடந்த 16ஆம் திகதி கிரீஸ் நாட்டின் கோர்புவிலிருந்து ஜெர்மனிக்கு செல்லும் போயிங் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென தீப்பற்றியுள்ளது.

விமானத்தில் 273 பயணிகளும் 8 பணியாளர்களும் இருந்ததாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

விமானம் புறப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பின்னர் இந்த சம்பவம் நடந்த நிலையில், 

இத்தாலியின் பிரிண்டிசி நகரில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நடுவானில் தீப்பற்றிய விமானம்; பயணிகள் அலறல் நூலிழையில் தப்பிய உயிர்கள் கிரீஸில் இருந்து ஜெர்மனி சென்ற போயிங் 757 விமானம் நடுவானில் தீப்பற்றியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்நிலையில் விமானம் அவசரமாக இத்தாலிக்கு திருப்பிவிடப்பட்டதுடன், பயணிகள் பாதுகாப்பாக தரை இறங்கப்படதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 16ஆம் திகதி கிரீஸ் நாட்டின் கோர்புவிலிருந்து ஜெர்மனிக்கு செல்லும் போயிங் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென தீப்பற்றியுள்ளது.விமானத்தில் 273 பயணிகளும் 8 பணியாளர்களும் இருந்ததாக தெரிவிக்கப்ட்டுள்ளது.விமானம் புறப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பின்னர் இந்த சம்பவம் நடந்த நிலையில், இத்தாலியின் பிரிண்டிசி நகரில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement