தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் மாணவர்களிடையே நடத்தி வரும் மாணாக்க உழவர் வீட்டுத்தோட்டப் போட்டி இந்த ஆண்டும் நடைபெறவுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் இப்போது கோரப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த ஊடக அறிக்கையில்,
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே வீட்டுத்தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக மாணாக்க உழவர் என்னும் வீட்டுத்தோட்டப் போட்டியை ஆண்டுதோறும் நடாத்தி வருகிறது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, உணவுப்பற்றாக்குறை, நஞ்சற்ற உணவுற்பத்தி, மாணவர்களை மனஅழுத்தங்களில் இருந்து விடுவித்தல் ஆகியவனவற்றை நோக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் இப்போட்டியின் இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஏற்கனவே வீட்டுத்தோட்டச் செய்கையில் ஈடுபட்டுள்ள மாணவர்களும், புதிதாக ஈடுபட விரும்பும் மாணவர்களும் இந்த ஆண்டுக்குரிய மாணாக்க உழவர் போட்டியில் கலந்துகொள்ள முடியும்.
போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கான செயன்முறை வழிகாட்டற் கருத்தமர்வும் விதைப்பொதிகள் விநியோகமும் எதிர்வரும் 24.08.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணிக்கு பருத்தித்துறை வீதியில், நல்லூர் சட்டநாதர் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் பிரதி விவசாயப் பணிப்பாளர் கிருபவதனி சிவதீபன், இயற்கை விவசாயச் செயற்பாட்டாளர் சி. நிரோசன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.
இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் இம் மாதம் 22ஆம் திகதி காலை காலை 10.30 மணிக்கு முன்பாக 0777969644 அல்லது 0741471759 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளல் வேண்டும்.
இவ்வாறு பெயர்களைப் பதிவு செய்பவர்கள் மாத்திரமே 24ஆம் திகதி நடைபெறவுள்ள செயன்முறை வழிகாட்டல் கருத்தமர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாணாக்க உழவர் சான்றிதழ்களும் சிறப்பாக வீட்டுத்தோட்டச் செய்கையை மேற்கொள்பவர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணாக்க உழவர் - 2025 வீட்டுத்தோட்டப் போட்டி தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் மாணவர்களிடையே நடத்தி வரும் மாணாக்க உழவர் வீட்டுத்தோட்டப் போட்டி இந்த ஆண்டும் நடைபெறவுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் இப்போது கோரப்பட்டுள்ளன.இதுதொடர்பாக தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.அந்த ஊடக அறிக்கையில்,தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே வீட்டுத்தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக மாணாக்க உழவர் என்னும் வீட்டுத்தோட்டப் போட்டியை ஆண்டுதோறும் நடாத்தி வருகிறது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, உணவுப்பற்றாக்குறை, நஞ்சற்ற உணவுற்பத்தி, மாணவர்களை மனஅழுத்தங்களில் இருந்து விடுவித்தல் ஆகியவனவற்றை நோக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் இப்போட்டியின் இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஏற்கனவே வீட்டுத்தோட்டச் செய்கையில் ஈடுபட்டுள்ள மாணவர்களும், புதிதாக ஈடுபட விரும்பும் மாணவர்களும் இந்த ஆண்டுக்குரிய மாணாக்க உழவர் போட்டியில் கலந்துகொள்ள முடியும்.போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கான செயன்முறை வழிகாட்டற் கருத்தமர்வும் விதைப்பொதிகள் விநியோகமும் எதிர்வரும் 24.08.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணிக்கு பருத்தித்துறை வீதியில், நல்லூர் சட்டநாதர் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் பிரதி விவசாயப் பணிப்பாளர் கிருபவதனி சிவதீபன், இயற்கை விவசாயச் செயற்பாட்டாளர் சி. நிரோசன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் இம் மாதம் 22ஆம் திகதி காலை காலை 10.30 மணிக்கு முன்பாக 0777969644 அல்லது 0741471759 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளல் வேண்டும். இவ்வாறு பெயர்களைப் பதிவு செய்பவர்கள் மாத்திரமே 24ஆம் திகதி நடைபெறவுள்ள செயன்முறை வழிகாட்டல் கருத்தமர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாணாக்க உழவர் சான்றிதழ்களும் சிறப்பாக வீட்டுத்தோட்டச் செய்கையை மேற்கொள்பவர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.