• Aug 14 2025

வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதிய லொறி - நுவரெலியா வரும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

Chithra / Aug 14th 2025, 12:05 pm
image

நுவரெலியா - நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாவத்த பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற சிறிய ரக லொறியே நானுஓயா பங்களாவத்த பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையால் வீதியோரத்தில் இருந்த மின்கம்பத்துடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமுற்ற சரதியும் மற்றொருவரும் நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தின் காரணமாக லொறிக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. 

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது நுவரெலியா மாவட்டத்தில்  நிலவிவரும் சீரற்ற காலநிலையின் காரணமாக நுவரெலியா பகுதியில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் கவனமாக பயணிக்குமாறும் பொலிஸார் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் பிலக்பூல் சந்தி, வெண்டிகோனர், பங்களாஹத்த, நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதி போன்ற இடங்களில் வழமைக்கு மாறாக அதிகளவான பனி மூட்டம் காணப்படுகின்றது. இதனால் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றன.


வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதிய லொறி - நுவரெலியா வரும் சாரதிகளுக்கு எச்சரிக்கை நுவரெலியா - நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாவத்த பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் காயமடைந்துள்ளனர்.கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற சிறிய ரக லொறியே நானுஓயா பங்களாவத்த பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையால் வீதியோரத்தில் இருந்த மின்கம்பத்துடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.விபத்தில் காயமுற்ற சரதியும் மற்றொருவரும் நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்தின் காரணமாக லொறிக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது நுவரெலியா மாவட்டத்தில்  நிலவிவரும் சீரற்ற காலநிலையின் காரணமாக நுவரெலியா பகுதியில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் கவனமாக பயணிக்குமாறும் பொலிஸார் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.குறிப்பாக நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் பிலக்பூல் சந்தி, வெண்டிகோனர், பங்களாஹத்த, நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதி போன்ற இடங்களில் வழமைக்கு மாறாக அதிகளவான பனி மூட்டம் காணப்படுகின்றது. இதனால் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement