• Aug 14 2025

மோட்டார் சைக்கிளை மோதிய லொறி; குழந்தையுடன் மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்!

shanuja / Aug 14th 2025, 12:41 pm
image

மோட்டார் சைக்கிள் ஒன்றை லொறி மோதித் தள்ளியதில் 8 மாத குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பம் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளது. 

 

இந்த விபத்துச் சம்பவம் அநுராதபுரம் - குருநாகல் பிரதான வீதியின் தலாவ மொரகொட சந்திக்கு அருகில் ஏற்பட்டுள்ளது. 


விபத்து தொடர்பில் வெளியாகியுள்ள  சிசிரிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துத் தொடர்பில் தெரியவருகையில்,


குறித்த வீதியில் 8 மாத குழந்தை மற்றும் தனது மனைவியுடன் நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார். 


இதன்போது அவ்வழியே பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று, மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்ட போது இந்த விபத்து  சம்பவித்துள்ளது. 


விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குழந்தை சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளது. 


விபத்தையடுத்து ஆவேசமடைந்த  குழந்தையின் தந்தையான சாரதி, லொறியின் சாரதியை தாக்கியுள்ளார். விபத்தும் விபத்தின் பின்னர் லொறியின் சாரதியைத் தாக்கும்  காட்சிகளும் சிசிரிவி காணொளியில் வெளிவந்துள்ளது. 


விபத்து  தொடர்பான  மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளை மோதிய லொறி; குழந்தையுடன் மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம் மோட்டார் சைக்கிள் ஒன்றை லொறி மோதித் தள்ளியதில் 8 மாத குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பம் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளது.  இந்த விபத்துச் சம்பவம் அநுராதபுரம் - குருநாகல் பிரதான வீதியின் தலாவ மொரகொட சந்திக்கு அருகில் ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் வெளியாகியுள்ள  சிசிரிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துத் தொடர்பில் தெரியவருகையில்,குறித்த வீதியில் 8 மாத குழந்தை மற்றும் தனது மனைவியுடன் நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார். இதன்போது அவ்வழியே பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று, மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்ட போது இந்த விபத்து  சம்பவித்துள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குழந்தை சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளது. விபத்தையடுத்து ஆவேசமடைந்த  குழந்தையின் தந்தையான சாரதி, லொறியின் சாரதியை தாக்கியுள்ளார். விபத்தும் விபத்தின் பின்னர் லொறியின் சாரதியைத் தாக்கும்  காட்சிகளும் சிசிரிவி காணொளியில் வெளிவந்துள்ளது. விபத்து  தொடர்பான  மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement