• Aug 14 2025

திங்கட்கிழமைகளில் மூடப்படும் அருங்காட்சியகங்கள்!

Chithra / Aug 14th 2025, 9:18 am
image


கொழும்பு தேசிய அருங்காட்சியகம் உட்பட அதன் கீழுள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் மூடப்படுமென, தேசிய அருங்காட்சியக திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பராமரிப்பு பணிகளுக்காக, அவை மூடப்படவுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன், சுதந்திர தினம், தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு, தொழிலாளர் தினம் போன்ற விசேட விடுமுறை தினங்களில் அருங்காட்சியகங்கள் மூடப்படும். 

ஏனைய அனைத்து நாட்களிலும், காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, அனைத்து அருங்காட்சியகங்களும் பொது மக்களின் பார்வைக்காக திறந்திருக்குமெனவும், தேசிய அருங்காட்சியக திணைக்களம் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமைகளில் மூடப்படும் அருங்காட்சியகங்கள் கொழும்பு தேசிய அருங்காட்சியகம் உட்பட அதன் கீழுள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் மூடப்படுமென, தேசிய அருங்காட்சியக திணைக்களம் தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக, அவை மூடப்படவுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், சுதந்திர தினம், தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு, தொழிலாளர் தினம் போன்ற விசேட விடுமுறை தினங்களில் அருங்காட்சியகங்கள் மூடப்படும். ஏனைய அனைத்து நாட்களிலும், காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, அனைத்து அருங்காட்சியகங்களும் பொது மக்களின் பார்வைக்காக திறந்திருக்குமெனவும், தேசிய அருங்காட்சியக திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement