• Aug 14 2025

இலங்கையிலும் சாதனை படைத்த கூலி; ப்ரீ புக்கிங்கில் கோடிகளை அள்ளியது

Chithra / Aug 14th 2025, 11:07 am
image


ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது. 

மாஸ்டர், லியோ, விக்ரம் ஆகிய படங்களின் வரிசையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்கியுள்ளார். 

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், உபேந்திரா, நாகர்ஜூனா, சௌபின் ஷாகிர், காளி வெங்கட், ஸ்ருதி ஹாசன் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கூலி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே படத்தின் ப்ரீ புக்கிங் மற்றும் ஓடிடி உரிமை மூலமாக இந்தப் படம் தயாரிப்பாளருக்கு ரூ.300 கோடி வரையில் லாபம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. 

இது ஒரு புறம் இருந்தாலும் 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ரஜினிகாந்தின் கூலி படமும் ஒன்று. 

அதோடு, இதுவரையில் எந்த கோலிவுட் படமும் ரூ.1000 கோடி வரையில் வசூல் குவிக்காத நிலையில் அதனை சூப்பர் ஸ்டாரின் கூலி படம் அசால்டாக முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் கூலி படம் ப்ரீ புக்கிங்கில் டைம்ஸ் ஆப் இந்தியா கணிப்பின்படி,

தமிழகத்தில் ரூ.27 கோடியும், இந்தியாவில் மட்டும் ரூ.53 கோடியும், உலகளவில் ரூ.35 கோடி வரையிலும் வசூல் குவித்து ப்ரீ புக்கிங்கில் மட்டும் மொத்தமாக ரூ.88 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. 

கூலி ஃப்ரீ புக்கிங்கில் வட அமெரிக்காவில் 2 மில்லியன் டாலர் (ரூ.16.8 கோடி) வசூல் குவித்து சாதனை படைத்தது. 

இந்த நிலையில்  இலங்கையிலும் கூலி படம் ரூ.4.85 கோடி வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது. 


 

இலங்கையிலும் சாதனை படைத்த கூலி; ப்ரீ புக்கிங்கில் கோடிகளை அள்ளியது ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது. மாஸ்டர், லியோ, விக்ரம் ஆகிய படங்களின் வரிசையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், உபேந்திரா, நாகர்ஜூனா, சௌபின் ஷாகிர், காளி வெங்கட், ஸ்ருதி ஹாசன் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.கூலி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே படத்தின் ப்ரீ புக்கிங் மற்றும் ஓடிடி உரிமை மூலமாக இந்தப் படம் தயாரிப்பாளருக்கு ரூ.300 கோடி வரையில் லாபம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ரஜினிகாந்தின் கூலி படமும் ஒன்று. அதோடு, இதுவரையில் எந்த கோலிவுட் படமும் ரூ.1000 கோடி வரையில் வசூல் குவிக்காத நிலையில் அதனை சூப்பர் ஸ்டாரின் கூலி படம் அசால்டாக முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் தான் கூலி படம் ப்ரீ புக்கிங்கில் டைம்ஸ் ஆப் இந்தியா கணிப்பின்படி,தமிழகத்தில் ரூ.27 கோடியும், இந்தியாவில் மட்டும் ரூ.53 கோடியும், உலகளவில் ரூ.35 கோடி வரையிலும் வசூல் குவித்து ப்ரீ புக்கிங்கில் மட்டும் மொத்தமாக ரூ.88 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. கூலி ஃப்ரீ புக்கிங்கில் வட அமெரிக்காவில் 2 மில்லியன் டாலர் (ரூ.16.8 கோடி) வசூல் குவித்து சாதனை படைத்தது. இந்த நிலையில்  இலங்கையிலும் கூலி படம் ரூ.4.85 கோடி வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement