• Aug 14 2025

கடமைகளை பொறுப்பேற்றார் புதிய பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய!

Chithra / Aug 14th 2025, 9:38 am
image

புதிய பொலிஸ்மா அதிபராக  சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இன்று காலை கடமைகளை பொறுப்பேற்றார்.

பொலிஸ் தலைமையகத்தில் வைத்து அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து  கருத்து வௌியிட்ட பிரியந்த வீரசூரிய 

தனது கடமைகளின் போது பொலிஸ் துறையின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யப்போவதாக உறுதியளித்துள்ளார்.

அத்துடன் பொலிஸ் துறையின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க தாம் பணியாற்றி வருவதாகவும், இதற்காக அனைத்து பொலிஸ் அதிகாரிகளிடமிருந்தும் உயர் செயல்திறனை எதிர்பார்ப்பதாகவும், புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

மேலும் ஒழுக்கமான பொலிஸ் துறையை நிறுவுவதே தனது ஒரே நோக்கம் என்றும், அதனை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கடமைகளை பொறுப்பேற்றார் புதிய பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய புதிய பொலிஸ்மா அதிபராக  சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இன்று காலை கடமைகளை பொறுப்பேற்றார்.பொலிஸ் தலைமையகத்தில் வைத்து அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இது குறித்து  கருத்து வௌியிட்ட பிரியந்த வீரசூரிய தனது கடமைகளின் போது பொலிஸ் துறையின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யப்போவதாக உறுதியளித்துள்ளார்.அத்துடன் பொலிஸ் துறையின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க தாம் பணியாற்றி வருவதாகவும், இதற்காக அனைத்து பொலிஸ் அதிகாரிகளிடமிருந்தும் உயர் செயல்திறனை எதிர்பார்ப்பதாகவும், புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.மேலும் ஒழுக்கமான பொலிஸ் துறையை நிறுவுவதே தனது ஒரே நோக்கம் என்றும், அதனை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement