பாம்புகளைக் கண்டறிய பாம்பு பிடி வீரர்களுக்காக நாகம் செயலி ஒன்று சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலக பாம்பு தினத்தையொட்டி, தமிழக வனத்துறை சார்பில் பாம்பு பிடி வீரர்களுக்கு இரண்டு நாள் தொழில்நுட்ப செயல்திறன் பயிற்சி, சென்னை கிண்டியில் உள்ள குழந்தைகள் பூங்காவில் நேற்று இடம்பெற்றது.
இதன்போதே பாம்புபிடி வீரர்களுக்கு என நாகம் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நாகம் செயலி பொதுமக்கள் பாம்புகளை பார்த்தவுடன் முறைப்பாடு பதிவு செய்யவும், உரிய நேரத்தில் மீட்பு நடவடிக்கையை உறுதி செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு பதிவு செய்தால் உடனடியாக பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அறிவியல் முறையில் பாம்புகளைப் பிடித்து, அதற்கான வாழ்விடத்தில் விடுவர்.
இச்செயலியில் பாம்பு பிடி பயிற்சி பெற்ற வீரர்கள் பெயர், தொலைபேசி இலக்கம், பாம்பு கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி நடவடிக்கை, ஆண்டுவாரியாக பாதிக்கப்பட்டோர் விபரம் போன்ற தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இச்செயலி ஓரிரு நாட்களில் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
செயலியை அறிமுகம் செய்த பின்னர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,
நகர்ப்புறங்களில் பாம்பு குறித்த பயம் மற்றும் தவறான புரிதல் தற்போதும் நிலவுகிறது. ஆனால், கிராமங்களில் அவ்வாறு இல்லை. தற்போது பாம்பு கடி என்பது, அறிவிக்கப்பட வேண்டிய நோய்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
அதேபோல், மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவோர், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும். இருளர் சமூகத்தினர் இந்த பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்.
நாகம் செயலியில் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஏனெனில், பயிற்சி பெற்றவரால் மட்டுமே, பாதுகாப்பான முறையில் பாம்புகளை மீட்க முடியும் என்று தெரிவித்தார்.
பாம்புகளைக் கண்டறிய நாகம் செயலி - பாம்பு பிடி வீரர்களுக்கு சென்னையில் அறிமுகம் பாம்புகளைக் கண்டறிய பாம்பு பிடி வீரர்களுக்காக நாகம் செயலி ஒன்று சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலக பாம்பு தினத்தையொட்டி, தமிழக வனத்துறை சார்பில் பாம்பு பிடி வீரர்களுக்கு இரண்டு நாள் தொழில்நுட்ப செயல்திறன் பயிற்சி, சென்னை கிண்டியில் உள்ள குழந்தைகள் பூங்காவில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே பாம்புபிடி வீரர்களுக்கு என நாகம் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. நாகம் செயலி பொதுமக்கள் பாம்புகளை பார்த்தவுடன் முறைப்பாடு பதிவு செய்யவும், உரிய நேரத்தில் மீட்பு நடவடிக்கையை உறுதி செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. முறைப்பாடு பதிவு செய்தால் உடனடியாக பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அறிவியல் முறையில் பாம்புகளைப் பிடித்து, அதற்கான வாழ்விடத்தில் விடுவர். இச்செயலியில் பாம்பு பிடி பயிற்சி பெற்ற வீரர்கள் பெயர், தொலைபேசி இலக்கம், பாம்பு கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி நடவடிக்கை, ஆண்டுவாரியாக பாதிக்கப்பட்டோர் விபரம் போன்ற தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இச்செயலி ஓரிரு நாட்களில் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செயலியை அறிமுகம் செய்த பின்னர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், நகர்ப்புறங்களில் பாம்பு குறித்த பயம் மற்றும் தவறான புரிதல் தற்போதும் நிலவுகிறது. ஆனால், கிராமங்களில் அவ்வாறு இல்லை. தற்போது பாம்பு கடி என்பது, அறிவிக்கப்பட வேண்டிய நோய்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல், மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவோர், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும். இருளர் சமூகத்தினர் இந்த பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். நாகம் செயலியில் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஏனெனில், பயிற்சி பெற்றவரால் மட்டுமே, பாதுகாப்பான முறையில் பாம்புகளை மீட்க முடியும் என்று தெரிவித்தார்.