• Sep 08 2025

மாகாண சபைத் தேர்தலையும் தேசிய மக்கள் சக்தி வெற்றிகொள்ளும்! - டில்வின் சில்வா உறுதி

Chithra / Sep 8th 2025, 9:02 am
image

 

மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நூலகம் ஒன்றை திறந்து வைத்து நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால், சில சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. 

குறிப்பாக, கடந்த அரசாங்கம் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டது. 

அதற்கமைய, புதிதாக எல்லை நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக செய்யப்பட்ட எல்லை நிர்ணயத்தில் பல்வேறு தவறுகள் இருந்தமையால் நாடாளுமன்றத்தில் அது நிறைவேற்றப்படவில்லை. இதன் காரணமாகவே மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியவில்லை.

இந்தநிலையில், புதிதாக மீண்டும் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது. அதற்காக புதிய ஆணைக்குழு ஒன்றை நியமித்து, எல்லை நிர்ணயம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதற்கமைய, ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெற்றிக் கொண்டது போன்று மாகாண சபைத் தேர்தலையும் தேசிய மக்கள் சக்தி வெற்றிகொள்ளும் என மக்கள்  டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்

மாகாண சபைத் தேர்தலையும் தேசிய மக்கள் சக்தி வெற்றிகொள்ளும் - டில்வின் சில்வா உறுதி  மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நூலகம் ஒன்றை திறந்து வைத்து நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால், சில சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. குறிப்பாக, கடந்த அரசாங்கம் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டது. அதற்கமைய, புதிதாக எல்லை நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக செய்யப்பட்ட எல்லை நிர்ணயத்தில் பல்வேறு தவறுகள் இருந்தமையால் நாடாளுமன்றத்தில் அது நிறைவேற்றப்படவில்லை. இதன் காரணமாகவே மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியவில்லை.இந்தநிலையில், புதிதாக மீண்டும் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது. அதற்காக புதிய ஆணைக்குழு ஒன்றை நியமித்து, எல்லை நிர்ணயம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கமைய, ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெற்றிக் கொண்டது போன்று மாகாண சபைத் தேர்தலையும் தேசிய மக்கள் சக்தி வெற்றிகொள்ளும் என மக்கள்  டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement