தென்னிந்திய பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
"நியேலினி" உலகளாவிய மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் "Song of Resilience" என்ற மாற்று இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே நடிகர் பிரகாஷ் ராஜ் இலங்கையை வந்தடைந்தார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயம் தொடர்பாக கலந்துரையாடும் "நியேலினி" உலகளாவிய மாநாடு, உலகின் 102 நாடுகளைச் சேர்ந்த 500 விஞ்ஞானிகள், ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளின் பங்கேற்பில், கண்டியில் உள்ள பொல்கொல்ல கூட்டுறவு கலையரங்கத்தில் நாளை திங்கட்கிழமை (08) மற்றும் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்பதாக, பிரகாஷ் ராஜ் இன்று மதியம் இந்தியாவின் பெங்களூரிலிருந்து இண்டிகோ விமானம் 6E-1167 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்
அவரை வரவேற்பதற்காக பலர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திடீரென இலங்கை வந்த பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தென்னிந்திய பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். "நியேலினி" உலகளாவிய மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் "Song of Resilience" என்ற மாற்று இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே நடிகர் பிரகாஷ் ராஜ் இலங்கையை வந்தடைந்தார். உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயம் தொடர்பாக கலந்துரையாடும் "நியேலினி" உலகளாவிய மாநாடு, உலகின் 102 நாடுகளைச் சேர்ந்த 500 விஞ்ஞானிகள், ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளின் பங்கேற்பில், கண்டியில் உள்ள பொல்கொல்ல கூட்டுறவு கலையரங்கத்தில் நாளை திங்கட்கிழமை (08) மற்றும் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற உள்ளது.இதில் பங்கேற்பதாக, பிரகாஷ் ராஜ் இன்று மதியம் இந்தியாவின் பெங்களூரிலிருந்து இண்டிகோ விமானம் 6E-1167 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்அவரை வரவேற்பதற்காக பலர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.