• Sep 07 2025

கனிமப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறிகள்; பாடசாலை நேரங்களில் செல்வதற்கு தடை!

shanuja / Sep 7th 2025, 6:19 pm
image

கனிமப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறிகள் பாடசாலை நேரங்களில்  வீதிகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


வீதி பாதுகாப்பு காரணங்களுக்காக, பாடசாலை நேரங்களில் கனிமப் பொருட்களை கொண்டு செல்வதை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


டிப்பர் மற்றும் பாடசாலை வேன் மோதி அண்மையில் இடம்பெற்ற விபத்தையடுத்து இடம்பெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் ஜெனரல் தீபானி வீரக்கோன் தெரிவித்தார்.


அதன்படி, பாடசாலை நாட்களில் காலை 6:30 மணி முதல் காலை 7:45 மணி வரையிலும், முற்பகல் 11:30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரையிலும் கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அந்த நேரங்களில் குறிப்பிட்ட வீதியோரப் பகுதிகளில் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலகங்கள் மூலம் விழிப்புணர்வு அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனிமப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறிகள்; பாடசாலை நேரங்களில் செல்வதற்கு தடை கனிமப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறிகள் பாடசாலை நேரங்களில்  வீதிகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.வீதி பாதுகாப்பு காரணங்களுக்காக, பாடசாலை நேரங்களில் கனிமப் பொருட்களை கொண்டு செல்வதை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.டிப்பர் மற்றும் பாடசாலை வேன் மோதி அண்மையில் இடம்பெற்ற விபத்தையடுத்து இடம்பெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் ஜெனரல் தீபானி வீரக்கோன் தெரிவித்தார்.அதன்படி, பாடசாலை நாட்களில் காலை 6:30 மணி முதல் காலை 7:45 மணி வரையிலும், முற்பகல் 11:30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரையிலும் கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அந்த நேரங்களில் குறிப்பிட்ட வீதியோரப் பகுதிகளில் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலகங்கள் மூலம் விழிப்புணர்வு அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement