• Sep 08 2025

எல்ல பேருந்து விபத்து; பலரின் கண்ணீருக்கு மத்தியில் நடந்த இறுதி சடங்கு! பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அஞ்சலி

Chithra / Sep 8th 2025, 8:01 am
image

எல்ல-வெல்லவாய சாலையில் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த தங்காலை மக்களின் இறுதிச் சடங்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று கலந்து கொண்டார்.

இந்த விபத்தில் பேருந்து சாரதி, தங்காலை மாநகர சபையின் செயலாளர் மற்றும் பல நகராட்சி ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உயிரிழந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கடுருபோகுன, அரன்வல, கட்டமன்னே, பள்ளிக்குடாவ, தெனகம மற்றும் பெலியத்த உள்ளிட்ட தங்காலை மாநகர சபைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை  பிரதமர் ஹரிணி அமரசூரியவும் அங்கு சென்று அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எல்ல பேருந்து விபத்து; பலரின் கண்ணீருக்கு மத்தியில் நடந்த இறுதி சடங்கு பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அஞ்சலி எல்ல-வெல்லவாய சாலையில் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த தங்காலை மக்களின் இறுதிச் சடங்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று கலந்து கொண்டார்.இந்த விபத்தில் பேருந்து சாரதி, தங்காலை மாநகர சபையின் செயலாளர் மற்றும் பல நகராட்சி ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உயிரிழந்தனர்.பாதிக்கப்பட்டவர்கள் கடுருபோகுன, அரன்வல, கட்டமன்னே, பள்ளிக்குடாவ, தெனகம மற்றும் பெலியத்த உள்ளிட்ட தங்காலை மாநகர சபைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.இதேவேளை  பிரதமர் ஹரிணி அமரசூரியவும் அங்கு சென்று அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement