• Sep 07 2025

அடுத்த சில நாட்களில் வடக்கில் பலத்த மழை; வெளியானது எச்சரிக்கை!

shanuja / Sep 7th 2025, 6:01 pm
image

அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக  வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 



வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, 


வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 


இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 


மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் 


எனவே காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள  எச்சரிக்கையுடன் இருக்குமாறு  வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

அடுத்த சில நாட்களில் வடக்கில் பலத்த மழை; வெளியானது எச்சரிக்கை அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக  வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவே காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள  எச்சரிக்கையுடன் இருக்குமாறு  வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement