• Jul 17 2025

மன்னார் நகரசபையில் தொடரும் மோதல்; வாய்த்தர்க்கம் அதிகமானதால் மீண்டும் அமர்வு ஒத்திவைப்பு

shanuja / Jul 17th 2025, 5:43 pm
image

மன்னார் நகரசபை அமர்வின் போது முன்னாள் முதல்வர், தற்போதைய முதல்வர், உறுப்பினர் ஒருவர் இடையே வாய்த்தர்க்கம் வலுப்பெற மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 


மன்னார் நகர சபையின் கன்னி அமர்வு கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற போது சபையில்  உறுப்பினர்களுக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதால் சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.


ஒத்திவைக்கப்பட்ட அமர்வு இன்று வியாழக்கிழமை (17) காலை 9.30 மணிக்கு சபை முதல்வரினால் மீண்டும் கூட்டப்பட்டது. இதன் போது அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அமர்விற்கு மன்னார் நகர  சபையின் முன்னாள் முதல்வர் கலந்துகொண்டார். 


அமர்வில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போது முன்னாள் முதல்வரும் நகர சபையின் உறுப்பினருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனுக்குமு் தற்போதைய முதல்வர் டானியல் வசந்தன் ஆகியோருக்கு இடையில்  தொடர்ச்சியாக கருத்து முரண்பாடு ஏற்பட்டு வாய்த் தர்க்கமாக மாறியது.


குறித்த இருவரும் நாவடக்கம் இன்றி மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன் வைத்து  சபையில் மோதிக்கொண்டனர். அதன்பின்னர்  புதிய செயலாளருக்கு காசோலையில் ஒப்பமிடுதல், மக்களினால் தீர்மானிக்கப்பட்ட  அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி, ஒப்பந்த அடிப்படை மற்றும் நிரந்தர மாக கடமையாற்றுகின்ற ஊழியர்களின் சம்பளம் வழங்குதல்  ஆகியவற்றுக்கான அனுமதி  கோரப்பட்ட நிலையில் சபையினால் அனுமதி வழங்கப்பட்டு சபை அமர்வு நிறைவுபெற்றது.

மன்னார் நகரசபையில் தொடரும் மோதல்; வாய்த்தர்க்கம் அதிகமானதால் மீண்டும் அமர்வு ஒத்திவைப்பு மன்னார் நகரசபை அமர்வின் போது முன்னாள் முதல்வர், தற்போதைய முதல்வர், உறுப்பினர் ஒருவர் இடையே வாய்த்தர்க்கம் வலுப்பெற மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மன்னார் நகர சபையின் கன்னி அமர்வு கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற போது சபையில்  உறுப்பினர்களுக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதால் சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.ஒத்திவைக்கப்பட்ட அமர்வு இன்று வியாழக்கிழமை (17) காலை 9.30 மணிக்கு சபை முதல்வரினால் மீண்டும் கூட்டப்பட்டது. இதன் போது அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அமர்விற்கு மன்னார் நகர  சபையின் முன்னாள் முதல்வர் கலந்துகொண்டார். அமர்வில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போது முன்னாள் முதல்வரும் நகர சபையின் உறுப்பினருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனுக்குமு் தற்போதைய முதல்வர் டானியல் வசந்தன் ஆகியோருக்கு இடையில்  தொடர்ச்சியாக கருத்து முரண்பாடு ஏற்பட்டு வாய்த் தர்க்கமாக மாறியது.குறித்த இருவரும் நாவடக்கம் இன்றி மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன் வைத்து  சபையில் மோதிக்கொண்டனர். அதன்பின்னர்  புதிய செயலாளருக்கு காசோலையில் ஒப்பமிடுதல், மக்களினால் தீர்மானிக்கப்பட்ட  அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி, ஒப்பந்த அடிப்படை மற்றும் நிரந்தர மாக கடமையாற்றுகின்ற ஊழியர்களின் சம்பளம் வழங்குதல்  ஆகியவற்றுக்கான அனுமதி  கோரப்பட்ட நிலையில் சபையினால் அனுமதி வழங்கப்பட்டு சபை அமர்வு நிறைவுபெற்றது.

Advertisement

Advertisement

Advertisement