உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை பாதித்து வரும் புற்றுநோயைக் குணப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
புற்றுநோயைக் குணப்படுத்துவதற்காக ‘என்ட்ரோமிக்ஸ்’ என்ற புற்றுநோய் தடுப்பூசியை ரஷ்ய நாட்டு மருத்துவ மற்றும் உயிரியல் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
MRNA அடிப்படையிலான இந்த தடுப்பூசி அனைத்துவித பரிசோதனைகளிலும் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘என்ட்ரோமிக்ஸ்’ தடுப்பூசி புற்றுநோய் கட்டிகளை வெற்றிகரமாக அழித்துள்ளது. இந்த தடுப்பூசி ஏற்கனவே ரஷியாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட புற்றுநோயியல் மையங்களில் ஆரம்பகட்ட மருத்துவப் பயன்பாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிக்கு பயன்படுத்தப்பட்ட அதே எம்.ஆர்.என்.ஏ நுட்பமே இந்த தடுப்பூசிக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், இந்த தடுப்பூசி பொதுப் பயன்பாட்டுக்கு விடப்படும் என்று ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட அடுத்த தலைமுறை நோயெதிர்ப்பு சிகிச்சையாக இது இருக்கும் எனவும், கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சையைப் போல அல்லாமல் ஆரோக்கியமான திசுக்களை சேதப்படுத்தாமல், புற்றுநோய் செல்களை துல்லியமாக குறிவைத்து அழிக்கும் திறன் கொண்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஒட்டுமொத்த உலகையும் புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கும் புற்றுநோய்க்கு எதிராக இதுவரையில் எந்தவொரு தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை.
முதன்முறையாக புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடித்து அதனைப் பரிசோதனை செய்து வெற்றிகரமாக்கியுள்ளது ரஷ்யா.
இந்த நிலையில் எதிர்வரும் காலங்களில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்களுக்கு குறித்த தடுப்பூசி ஊடாக சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையை ரஷ்யா முன்வைத்துள்ளது.
புற்றுநோய்த் தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு; பரிசோதனையில் வெற்றியீட்டிய ரஷ்யா உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை பாதித்து வரும் புற்றுநோயைக் குணப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. புற்றுநோயைக் குணப்படுத்துவதற்காக ‘என்ட்ரோமிக்ஸ்’ என்ற புற்றுநோய் தடுப்பூசியை ரஷ்ய நாட்டு மருத்துவ மற்றும் உயிரியல் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. MRNA அடிப்படையிலான இந்த தடுப்பூசி அனைத்துவித பரிசோதனைகளிலும் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘என்ட்ரோமிக்ஸ்’ தடுப்பூசி புற்றுநோய் கட்டிகளை வெற்றிகரமாக அழித்துள்ளது. இந்த தடுப்பூசி ஏற்கனவே ரஷியாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட புற்றுநோயியல் மையங்களில் ஆரம்பகட்ட மருத்துவப் பயன்பாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு பயன்படுத்தப்பட்ட அதே எம்.ஆர்.என்.ஏ நுட்பமே இந்த தடுப்பூசிக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், இந்த தடுப்பூசி பொதுப் பயன்பாட்டுக்கு விடப்படும் என்று ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட அடுத்த தலைமுறை நோயெதிர்ப்பு சிகிச்சையாக இது இருக்கும் எனவும், கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சையைப் போல அல்லாமல் ஆரோக்கியமான திசுக்களை சேதப்படுத்தாமல், புற்றுநோய் செல்களை துல்லியமாக குறிவைத்து அழிக்கும் திறன் கொண்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்த உலகையும் புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கும் புற்றுநோய்க்கு எதிராக இதுவரையில் எந்தவொரு தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. முதன்முறையாக புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடித்து அதனைப் பரிசோதனை செய்து வெற்றிகரமாக்கியுள்ளது ரஷ்யா. இந்த நிலையில் எதிர்வரும் காலங்களில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்களுக்கு குறித்த தடுப்பூசி ஊடாக சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையை ரஷ்யா முன்வைத்துள்ளது.