• Jul 14 2025

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு!

Thansita / Jul 14th 2025, 7:32 pm
image

புத்தளம் - அக்கரயண தீவுப் பகுதியில் இருந்து ஒரு தொகை பீடி இலைகள் நேற்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி கடற்படையினர் குறித்த பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அந்தப் பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதிகளை சோதனையிட்டனர்.

இதன்போது, குறித்த காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1630 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பீடி இலைகள் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், கடற்படையினரின் கெடுபிடிகள் காரணமாக கடத்தல்காரர்களால் அந்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.

இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.


புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு புத்தளம் - அக்கரயண தீவுப் பகுதியில் இருந்து ஒரு தொகை பீடி இலைகள் நேற்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி கடற்படையினர் குறித்த பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அந்தப் பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதிகளை சோதனையிட்டனர்.இதன்போது, குறித்த காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1630 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.குறித்த பீடி இலைகள் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், கடற்படையினரின் கெடுபிடிகள் காரணமாக கடத்தல்காரர்களால் அந்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement