• May 28 2025

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து யாழில் ஆராய்வு..!

Sharmi / May 27th 2025, 11:38 am
image

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோரும் நடவடிக்கை இன்று (27)  யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏற்பாடில் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமான குறித்த கலந்துரையாடல் ஜூன் 3 ஆம் திகதி வரை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்திருந்தார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தவிசாளர் பேரசிரியர் கே.பி.எல் சந்திரலால், பிரதிப் பணிபளர் நாயகம் கலாநிதி நிலந்த சப்புமானகே, இலங்கை பொதுபயன்பாட்டுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க உள்ளிட்ட பிரதானிகள் பிரசன்னத்துடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது

 இந்த கலந்துரையாடலில் கட்டண அதிகரிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து பல்துறைசார் தரப்பின் பிரதிநிதிகள் வலியுறுத்தியிருந்தனர்.



மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து யாழில் ஆராய்வு. இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோரும் நடவடிக்கை இன்று (27)  யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏற்பாடில் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமான குறித்த கலந்துரையாடல் ஜூன் 3 ஆம் திகதி வரை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்திருந்தார்.இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தவிசாளர் பேரசிரியர் கே.பி.எல் சந்திரலால், பிரதிப் பணிபளர் நாயகம் கலாநிதி நிலந்த சப்புமானகே, இலங்கை பொதுபயன்பாட்டுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க உள்ளிட்ட பிரதானிகள் பிரசன்னத்துடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது இந்த கலந்துரையாடலில் கட்டண அதிகரிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து பல்துறைசார் தரப்பின் பிரதிநிதிகள் வலியுறுத்தியிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement