• Jul 13 2025

விமானிகள் மீது தவறா? ஏர் இந்தியா விமான விபத்து விசாரணை அறிக்கையை நிராகரிக்கும் விமானிகள் சங்கம்

shanuja / Jul 12th 2025, 7:37 pm
image

உலகத்தை உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பில் வெளியாகிய அறிக்கையை இந்திய விமானிகள் சங்கம் நிராகரித்துள்ளது. 


குஜராத் அகமதாபாத்தில் கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி  இடம்பெற்ற ஏர் இந்திய விமான விபத்தில் 241 பயணிகளுடன் மருத்துவ மாணவர்கள் உட்பட  260 பேர்  உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கியது. 


ஏர் இந்திய விமான விபத்துக்கான காரணத்தை அறியாது பலரும் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது விபத்து குறித்த 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (12) வெளியாகியுள்ளது.


அதன்படி, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து மீட்கப்பட்ட உரையாடல்களை வைத்து விசாரணை பணியகம் ஒரு அறிக்கையைத் தயார் செய்து வெளியிட்டுள்ளது.


விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு இயந்திரங்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் இயந்திரங்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதனால் விமானம் மேல் எழும்ப முடியாமல் விழுந்து நொறுங்கியுள்ளது.


விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விமானிகள் இருவர் பேசிக்கொண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் 'எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள்' எனக் கேட்டுள்ளார். அதற்கு, தான் அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதிலளித்திருப்பதும் விசாரணை அறிக்கையில் வெளியாகியுள்ளது.


இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய விமானிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது, 

விசாரணை நடக்கும் தொனியும், திசையும், விமானிகள் மீது தான் தவறு என்ற ஒரு தலைபட்சமாக செல்கிறது. இந்த அனுமானத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். உண்மையான ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.


பொறுப்பான அதிகாரி கையெழுத்து அல்லது ஒப்புதல் இல்லாமல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விசாரணை ரகசியமாக நடைபெறுவதால், அதில் வெளிப்படைத்தன்மை இல்லாததுடன், அதன் நம்பகத்தன்மை மற்றும் பொது மக்களின் நம்பிக்கையை குறைக்கிறது. அனுபவம் வாய்ந்த விமானிகள் இன்னும் விசாரணைக்குழுவில் சேர்க்கப்படவில்லை. - என்றுள்ளது. 


முதற்கட்ட அறிக்கையைத் தொடர்ந்து  முழுமையான அறிக்கை வெளிவர இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்று விமான விபத்து குறித்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விமானிகள் மீது தவறா ஏர் இந்தியா விமான விபத்து விசாரணை அறிக்கையை நிராகரிக்கும் விமானிகள் சங்கம் உலகத்தை உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பில் வெளியாகிய அறிக்கையை இந்திய விமானிகள் சங்கம் நிராகரித்துள்ளது. குஜராத் அகமதாபாத்தில் கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி  இடம்பெற்ற ஏர் இந்திய விமான விபத்தில் 241 பயணிகளுடன் மருத்துவ மாணவர்கள் உட்பட  260 பேர்  உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கியது. ஏர் இந்திய விமான விபத்துக்கான காரணத்தை அறியாது பலரும் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது விபத்து குறித்த 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (12) வெளியாகியுள்ளது.அதன்படி, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து மீட்கப்பட்ட உரையாடல்களை வைத்து விசாரணை பணியகம் ஒரு அறிக்கையைத் தயார் செய்து வெளியிட்டுள்ளது.விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு இயந்திரங்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் இயந்திரங்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதனால் விமானம் மேல் எழும்ப முடியாமல் விழுந்து நொறுங்கியுள்ளது.விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விமானிகள் இருவர் பேசிக்கொண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் 'எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள்' எனக் கேட்டுள்ளார். அதற்கு, தான் அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதிலளித்திருப்பதும் விசாரணை அறிக்கையில் வெளியாகியுள்ளது.இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய விமானிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது, விசாரணை நடக்கும் தொனியும், திசையும், விமானிகள் மீது தான் தவறு என்ற ஒரு தலைபட்சமாக செல்கிறது. இந்த அனுமானத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். உண்மையான ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.பொறுப்பான அதிகாரி கையெழுத்து அல்லது ஒப்புதல் இல்லாமல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விசாரணை ரகசியமாக நடைபெறுவதால், அதில் வெளிப்படைத்தன்மை இல்லாததுடன், அதன் நம்பகத்தன்மை மற்றும் பொது மக்களின் நம்பிக்கையை குறைக்கிறது. அனுபவம் வாய்ந்த விமானிகள் இன்னும் விசாரணைக்குழுவில் சேர்க்கப்படவில்லை. - என்றுள்ளது. முதற்கட்ட அறிக்கையைத் தொடர்ந்து  முழுமையான அறிக்கை வெளிவர இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்று விமான விபத்து குறித்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement