விசாக பூரணை தினத்தை முன்னிட்டு சிறைச்சாலை கைதிகளுக்கு பார்வையாளர்களை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (12) மற்றும் நாளை மறுநாள் (13) ஆகிய இரு தினங்களும் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு கைதிக்கும் போதுமான வகையில், கைதியின் உறவினர்களால் கொண்டு வரப்படும் உணவுப் பொதிகள், இனிப்புகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஆகியவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவிக்கிறது.
இந்த பார்வையாளர்கள் சந்திப்பு நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இடம்பெறவுள்ளன.
இந்நிலையில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும், பேச்சாளருமான காமினி பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அரசியலமைப்பிற்கூடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய 4 பெண் சிறைக்கைதிகளும், 384 ஆண் சிறைக்கைதிகளும் விசேட பொது மன்னிப்பில் விடுவிக்கப்படவுள்ளனர்.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 கைதிகளுக்கு பொது மன்னிப்பு; கைதிகளை சந்திக்கவும் விசேட வாய்ப்பு விசாக பூரணை தினத்தை முன்னிட்டு சிறைச்சாலை கைதிகளுக்கு பார்வையாளர்களை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (12) மற்றும் நாளை மறுநாள் (13) ஆகிய இரு தினங்களும் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு கைதிக்கும் போதுமான வகையில், கைதியின் உறவினர்களால் கொண்டு வரப்படும் உணவுப் பொதிகள், இனிப்புகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஆகியவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவிக்கிறது. இந்த பார்வையாளர்கள் சந்திப்பு நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இடம்பெறவுள்ளன.இந்நிலையில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும், பேச்சாளருமான காமினி பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அரசியலமைப்பிற்கூடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய 4 பெண் சிறைக்கைதிகளும், 384 ஆண் சிறைக்கைதிகளும் விசேட பொது மன்னிப்பில் விடுவிக்கப்படவுள்ளனர்.