• Sep 07 2025

உலகளாவிய இணைய சேவையில் ஏற்பட்டுள்ள சீர்குலைவு !

Chithra / Sep 7th 2025, 2:44 pm
image

 

உலகளாவிய இணைய சேவையில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

செங்கடலில் உள்ள பல சர்வதேச கேபிள்கள் துண்டிக்கப்பட்டு சேதமடைந்துள்ளமையே இவ்வாறு இணைய சேவையில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளமைக்கு காரணம் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

செங்கடல் வழியாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவுடன் ஐரோப்பாவை இணைக்கும் பல சர்வதேச ஆழ்கடல் கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதன் விளைவாக, ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் பயனர்களுக்கு இணைய சேவைகளின் வேகம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய இணைய சேவையில் ஏற்பட்டுள்ள சீர்குலைவு  உலகளாவிய இணைய சேவையில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.செங்கடலில் உள்ள பல சர்வதேச கேபிள்கள் துண்டிக்கப்பட்டு சேதமடைந்துள்ளமையே இவ்வாறு இணைய சேவையில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளமைக்கு காரணம் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.செங்கடல் வழியாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவுடன் ஐரோப்பாவை இணைக்கும் பல சர்வதேச ஆழ்கடல் கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.இதன் விளைவாக, ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் பயனர்களுக்கு இணைய சேவைகளின் வேகம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement