• Sep 07 2025

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்க முயன்ற நபர் கைது

Chithra / Sep 7th 2025, 3:16 pm
image


ஹட்டன் எபோட்ஸ்லி தோட்டத்தில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த ஒரு தொகை  மதுபான போத்தல்களுடன்  ஒருவர் நேற்று (06) மாலை ஹட்டன் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் பௌர்ணமி தினங்களில் அதிக விலைக்கு சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்று வருவதாக ஹட்டன் ஊழல் தடுப்பு ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய வீட்டு வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 38 மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து சந்தேக நபரும்  கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களும் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் மற்றும் மதுபான போத்தல்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்க முயன்ற நபர் கைது ஹட்டன் எபோட்ஸ்லி தோட்டத்தில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த ஒரு தொகை  மதுபான போத்தல்களுடன்  ஒருவர் நேற்று (06) மாலை ஹட்டன் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த பகுதியில் பௌர்ணமி தினங்களில் அதிக விலைக்கு சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்று வருவதாக ஹட்டன் ஊழல் தடுப்பு ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன் போது சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய வீட்டு வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 38 மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.இதனையடுத்து சந்தேக நபரும்  கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களும் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.சந்தேக நபர் மற்றும் மதுபான போத்தல்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement