போதைப்பொருள் விநியோக சங்கிலியின் பின்னால் உள்ள அரசியல்வாதிகள் புகைப்படங்கள் எமக்கு கிடைத்துள்ளன. இது தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
ஹோமகமவில் நேற்று இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்களை கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட கொள்கலன்களின் உரிமையாளர்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் புகைப்படங்கள் எமக்கு கிடைத்துள்ளன.
இவற்றின் ஊடாக போதைப்பொருள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டிருந்தால் முழு நாடும் சீரழிவதற்கு அது வழிவகுத்திருக்கும்.
இது தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்கள் தராதரமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள், அவர்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்களை இனங்காண்பதற்கு சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
துப்பாக்கிச்சூடுகள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்களை கைது செய்ய முடியாவிட்டாலும், அதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஊடாக பெரும்பாலான சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் திணைக்களமும் இராணுவமும் இணைந்து முன்னெடுக்கும் இந்த சுற்றி வளைப்புக்களின் மூலம் பல குற்றங்கள் இடம்பெற முன்னரே அவற்றை தடுக்க முடிந்துள்ளது.
ஜனாதிபதியும் இதனை கடுமையாக வலியுறுத்திக் குறிப்பிட்டிருந்தார். கொழும்பு மாவட்டத்தில் போதைப்பொருள் தொடர்பான கலந்துரையாடல்கள் பிரதமர் தலைமையில் பிரத்தியேகமாக இடம்பெற்று வருகின்றன. என்றார்.
போதைப்பொருள் விநியோக சங்கிலியின் பின் அரசியல்வாதிகள் அடையாளம் - தராதரமின்றி சட்ட நடவடிக்கை போதைப்பொருள் விநியோக சங்கிலியின் பின்னால் உள்ள அரசியல்வாதிகள் புகைப்படங்கள் எமக்கு கிடைத்துள்ளன. இது தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.ஹோமகமவில் நேற்று இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்களை கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட கொள்கலன்களின் உரிமையாளர்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் புகைப்படங்கள் எமக்கு கிடைத்துள்ளன. இவற்றின் ஊடாக போதைப்பொருள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டிருந்தால் முழு நாடும் சீரழிவதற்கு அது வழிவகுத்திருக்கும். இது தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்கள் தராதரமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.போதைப்பொருள் கடத்தல்காரர்கள், அவர்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்களை இனங்காண்பதற்கு சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. துப்பாக்கிச்சூடுகள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்களை கைது செய்ய முடியாவிட்டாலும், அதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஊடாக பெரும்பாலான சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் திணைக்களமும் இராணுவமும் இணைந்து முன்னெடுக்கும் இந்த சுற்றி வளைப்புக்களின் மூலம் பல குற்றங்கள் இடம்பெற முன்னரே அவற்றை தடுக்க முடிந்துள்ளது. ஜனாதிபதியும் இதனை கடுமையாக வலியுறுத்திக் குறிப்பிட்டிருந்தார். கொழும்பு மாவட்டத்தில் போதைப்பொருள் தொடர்பான கலந்துரையாடல்கள் பிரதமர் தலைமையில் பிரத்தியேகமாக இடம்பெற்று வருகின்றன. என்றார்.