• Sep 07 2025

பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் பலி; திருவிழா ஊர்வலத்தில் நடந்து துயரம்

Chithra / Sep 7th 2025, 11:44 am
image

கோயில் திருவிழா ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது. 

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்பொத்தானை, 09ம் கொலனி, சதாம் நகர் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற திருவிழா ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததிலேயே குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்றிரவு  இடம்பெற்றுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்த குடும்பஸ்தர் அதே பகுதியில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய கணபதிப்பிள்ளை காளிராசா என தெரிய வந்துள்ளது.

ஊர்வலத்தின் போது பட்டாசு கொளுத்தியபோது ஒரு பட்டாசு வெடிக்காத நிலையில் உள்ளதை கண்டு அதனை காலால் தட்டிய போது பட்டாசு வெடித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது. 

உயிரிழந்தவரின் சடலம் தற்போது தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் பலி; திருவிழா ஊர்வலத்தில் நடந்து துயரம் கோயில் திருவிழா ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது. தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்பொத்தானை, 09ம் கொலனி, சதாம் நகர் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற திருவிழா ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததிலேயே குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் நேற்றிரவு  இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த குடும்பஸ்தர் அதே பகுதியில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய கணபதிப்பிள்ளை காளிராசா என தெரிய வந்துள்ளது.ஊர்வலத்தின் போது பட்டாசு கொளுத்தியபோது ஒரு பட்டாசு வெடிக்காத நிலையில் உள்ளதை கண்டு அதனை காலால் தட்டிய போது பட்டாசு வெடித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் தற்போது தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement